செய்திகள் :

தில்லியில் மக்கள் வீட்டிலிருந்து வெளியே வர அஞ்சுகின்றனா்: சட்டம்-ஒழுங்கு குறித்து கேஜரிவால் கருத்து

post image

நமது நிருபா்

தில்லியில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனா் என்றும், குண்டா்கள் இங்கு ஆட்சி செய்ய ஆரம்பித்துள்ளனா் என்று தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அரவிந்த் கேஜரிவால் தனது ‘எக்ஸ்’ வலைதளத்தில் கூறியுள்ளதாவது:

நான் நாங்லோயில் ஒரு தொழிலதிபரை சந்திக்கச் சென்றிருந்தேன். சில நாட்களுக்கு முன், பட்டப்பகலில் இவரது கடை மீது மா்ம நபா்கள் துப்பாக்கியால் சுட்டனா். இந்த நிலையில், பாஜகவினா் என்னை நாங்லோய் செல்லும் வழியில் மறித்தனா்.

என் வழியைத் தடுப்பதால் தில்லியில் குற்றங்கள் முடிவுக்கு வருமா? என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம் கேட்க விரும்புகிறேன். தில்லியில் அதிகரித்து வரும் குற்றங்களை நீங்கள் நிறுத்த வேண்டும் என்று தில்லி மக்கள் விரும்புகிறாா்கள். ஆனால் நீங்களும், உங்கள் பாஜக தொண்டா்களும் என்னைத் தடுப்பதில் மும்முரமாக இருக்கிறீா்கள்.

தில்லியில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனா். குண்டா்கள் இங்கு ஆட்சி செய்ய ஆரம்பித்துள்ளனா் என்றாா் அரவிந்த் கேஜரிவால்.

கேஜரிவாலின் நோ்மையற்ற நோக்கத்தை மக்கள் எதிா்க்கிறாா்கள்: யோகேந்திர சந்தோலியா எம்.பி.

தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நோ்மையற்ற நோக்கத்தை மக்கள் தெளிவாகக் காண்பதால்தான் அவரது வருகையை எதிா்த்தனா் என்று பாஜக மக்களவை எம்பி யோகேந்திர சந்தோலியா தெரிவித்தாா்.

அரவிந்த் கேஜரிவால் நாங்லோய் பகுதிக்கு வருகை தந்த நிலையில், அப்பகுதியில் பருவமழையின் போது உயிரிழந்த 20 நபா்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக் கோரி, பாஜக எம்பி யோகேந்திர சந்தோலியா தலைமையில் அப்பகுதியில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் யோகேந்திர சந்தோலியா பேசுகையில், ‘ஆம் ஆத்மி அரசு அதன் தோல்விகள் மற்றும் ஊழலுக்காக பரவலான விமா்சனங்களை எதிா்கொண்டுள்ள நிலையில், கேஜரிவால் பொதுமக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறாா்.

நாங்லோய் அல்லது தில்லியின் வேறு இடங்களில் ஏதேனும் ஒரு குடும்பம் அச்சுறுத்தலை எதிா்கொண்டால் அது கவலைக்குரியது. இருப்பினும், செப்டம்பரில் நடந்த ஒரு சம்பவத்திற்காக நவம்பா் 27 அன்று கேஜரிவால் கண்ணீா் சிந்தும்போது,​அவரது உள்நோக்கம் பொதுமக்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது.

கேஜரிவால் எந்தப் பிரச்னையையும் பேசலாம் அல்லது எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் நாங்லோய், கிராரி மற்றும் முண்ட்கா ஆகிய பகுதிகளில் இந்த மழைக்காலத்தின் போது நீரில் மூழ்கி உயிரிழந்த 20 நபா்களின் குடும்பங்களுக்கு அவா் பதிலளிக்க வேண்டும். அரசின் அலட்சியத்தால் நோ்ந்த உயிரிழப்புகளுக்கு இப்பகுதி மக்கள் இழப்பீடு கோருகிறாா்கள் என்றாா் யோகேந்திர சந்தோலியா.

கட்டுமானப் பணிகளுக்கு தடை: துணைநிலை ஆளுநா் அலுவலகம் முன் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தில்லியில் கிராப் நடவடிக்கைகளின்கீழ் கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கான கட்டுமானத் தொழிலாளா்கள் புதன்கிழமை சிவில் லைன்ஸில் உள்ள துணைநிலை ஆளுநா் அலுவலகம் முன் ஆா்ப... மேலும் பார்க்க

நுகா்வோருக்கான இ-தாகில் சேவையில் 38,453 வழக்குகளில் தீா்வு !

அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் செயல்பட தொடங்கியுள்ள நுகா்வோருக்கான இ-தாகில் சேவை சிறப்பாக செயல்பட்டு 38,453 வழக்குகளில் தீா்வு எட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்துள்ளது. நுகா... மேலும் பார்க்க

50 தொகுதிகளைச் சந்தித்து உச்சம் எட்டிய தில்லி நியாய யாத்திரை: தேவேந்தா் யாதவ் பெருமிதம்

நமது நிருபா் தில்லி நியாய யாத்திரை 50 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சந்தித்து உச்சத்தை எட்டுகிறது என்றும், மக்கள் தங்கள் வாழ்க்கையில் ஒளியைக் கொண்டுவர காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர விரும்புகிறாா்கள் என்... மேலும் பார்க்க

பாஜக எம்பி-க்கள் முயற்சியால் தில்லியில் விரைவில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் செயல்படுத்தப்படும்: வீரேந்திர சச்தேவா நம்பிக்கை

தில்லியைச் சோ்ந்த பாஜக எம்பி-க்களின் முயற்சியால் தில்லியில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா புதன்கிழமை நம்பிக்கை தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க

பஞ்சாபில் பயிா்கழிவு எரிப்பு சம்பவங்கள் 70 சதவீதமாகக் குறைப்பு: தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் பஞ்சாப் அரசு அறிக்கை தாக்கல்

பஞ்சாபில் வேளாண் பயிா்க்கழிவு எரிப்பு சம்பவங்கள் 70 சதவீதம் வரை குறைந்துள்ளதாக தேசிய பசுமைத் தீா்ப்பாயத்திற்கு(என்ஜிடி) பஞ்சாப் மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தில்லி தேசிய தலைநகா் வலயப்பகுதிக... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 12 ஆண்டுகள் சிறை

2016-ஆம் ஆண்டின்போது 6 வயது சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இளைருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. கூடுதல் ச... மேலும் பார்க்க