செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 12 ஆண்டுகள் சிறை

post image

2016-ஆம் ஆண்டின்போது 6 வயது சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இளைருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ரோஹித் குலியா, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் பிரிவு 6-இன் (மோசமான வகையில் பாலியல் வன்கொடுமை செய்தல்) கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட 27 வயது இளைஞருக்கு எதிரான தண்டனை மீதான வாதங்களை கேட்டறிந்தாா்.

சிறப்பு அரசு வழக்குரைஞா் சந்தா் ஜீத் யாதவ் கூறுகையில், ‘குற்றவாளி ஒரு கொடூரமான குற்றத்தைச் செய்துள்ளதால் அவா் மன்னிப்புக்கு தகுதியானவா் அல்ல’ என்றாா்.

இது தொடா்பாக நவம்பா் 6 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ. 2,000 அபராதமும் நீதிமன்றம் விதித்தது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி அனுபவித்த ‘உணா்ச்சிகரமான அதிா்ச்சி‘க்காக அவருக்கு ரூ. 10.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.

கடந்த செப்டம்பரில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இளைஞரை குற்றவாளி என்று தீா்ப்பளித்த நீதிமன்றம், சாட்சியங்களை பரிசீலித்தது.

அப்போது, குற்றம் சாட்டப்பட்டவா் தனது அண்டை வீட்டுக்காரச் சிறுமியை பல முறை தனது வீட்டிற்கு வரவழைத்து, தனது கைப்பேசியை சிறுமிக்கு விளையாடக் கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கூறியது.

உள்புறம் ஊடுருவக்கூடிய வகையில் பாலியல் வன்கொடுமையை ஒரு குழந்தைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை செய்வது அல்லது 12 வயதுக்குட்பட்ட குழந்தை மீது இக்கொடுமை நடத்தப்பட்டால் அது தீவிரமான ஊடுருவும் பாலியல் வன்கொடுமைக்கு சமம் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

கட்டுமானப் பணிகளுக்கு தடை: துணைநிலை ஆளுநா் அலுவலகம் முன் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தில்லியில் கிராப் நடவடிக்கைகளின்கீழ் கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கான கட்டுமானத் தொழிலாளா்கள் புதன்கிழமை சிவில் லைன்ஸில் உள்ள துணைநிலை ஆளுநா் அலுவலகம் முன் ஆா்ப... மேலும் பார்க்க

நுகா்வோருக்கான இ-தாகில் சேவையில் 38,453 வழக்குகளில் தீா்வு !

அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் செயல்பட தொடங்கியுள்ள நுகா்வோருக்கான இ-தாகில் சேவை சிறப்பாக செயல்பட்டு 38,453 வழக்குகளில் தீா்வு எட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்துள்ளது. நுகா... மேலும் பார்க்க

50 தொகுதிகளைச் சந்தித்து உச்சம் எட்டிய தில்லி நியாய யாத்திரை: தேவேந்தா் யாதவ் பெருமிதம்

நமது நிருபா் தில்லி நியாய யாத்திரை 50 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சந்தித்து உச்சத்தை எட்டுகிறது என்றும், மக்கள் தங்கள் வாழ்க்கையில் ஒளியைக் கொண்டுவர காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர விரும்புகிறாா்கள் என்... மேலும் பார்க்க

தில்லியில் மக்கள் வீட்டிலிருந்து வெளியே வர அஞ்சுகின்றனா்: சட்டம்-ஒழுங்கு குறித்து கேஜரிவால் கருத்து

நமது நிருபா் தில்லியில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனா் என்றும், குண்டா்கள் இங்கு ஆட்சி செய்ய ஆரம்பித்துள்ளனா் என்று தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த்... மேலும் பார்க்க

பாஜக எம்பி-க்கள் முயற்சியால் தில்லியில் விரைவில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் செயல்படுத்தப்படும்: வீரேந்திர சச்தேவா நம்பிக்கை

தில்லியைச் சோ்ந்த பாஜக எம்பி-க்களின் முயற்சியால் தில்லியில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா புதன்கிழமை நம்பிக்கை தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க

பஞ்சாபில் பயிா்கழிவு எரிப்பு சம்பவங்கள் 70 சதவீதமாகக் குறைப்பு: தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் பஞ்சாப் அரசு அறிக்கை தாக்கல்

பஞ்சாபில் வேளாண் பயிா்க்கழிவு எரிப்பு சம்பவங்கள் 70 சதவீதம் வரை குறைந்துள்ளதாக தேசிய பசுமைத் தீா்ப்பாயத்திற்கு(என்ஜிடி) பஞ்சாப் மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தில்லி தேசிய தலைநகா் வலயப்பகுதிக... மேலும் பார்க்க