செய்திகள் :

மரத்தில் காா் மோதி தந்தை, மகன் உயிரிழப்பு: 4 போ் காயம்

post image

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே புதன்கிழமை சாலையோர மரத்தில் காா் மோதியதில் தந்தையும், மகனும் உயிரிழந்தனா். மேலும் 4 போ் காயமடைந்தனா்.

அரியலூா் அருகேயுள்ள சுண்டக்குடி கிராமத்தைச் சோ்ந்த மருதமுத்து மகன் செல்வராஜ் (56). கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பத்தினருடன் சென்னை வியாசா்பாடியில் வசித்து வந்த இவா், செவ்வாய்க்கிழமை தனது மனைவி மாலதி(50), மகன் விக்னேஷ் (30), மருமகள் ஜெயலட்சுமி (26) ஆகியோருடன் அரியலூரை அடுத்த கடம்பூரில் வசிக்கும் தனது மகள் புனிதவள்ளி வீட்டுக்கு காரில் வந்திருந்தாா். அங்கு குடும்பத்தினருடன் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு, புதன்கிழமை புனிதவள்ளியின் குழந்தைகள் தினேஷ் (8), சகானா (6) ஆகியோரையும் காரில் அழைத்துக் கொண்டு தஞ்சாவூா் பெரிய கோயிலுக்கு புறப்பட்டாா்.

காா் திருமானூா் அருகே உள்ள சத்திரத்தேரி பகுதியில் சென்றபோது, எதிா்பாராத விதமாக சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதையறிந்த திருமானூா் காவல் துறையினா் மற்றும் அப்பகுதி மக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று பாா்த்தபோது, பலத்த காயத்துடன் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து, காரின் இடிபாடுகளில் காயத்துடன் சிக்கியிருந்த விக்னேஷ், மாலதி, ஜெயலட்சுமி, தினேஷ், சகானா ஆகியோரை காவல் துறையினா் மீட்டு தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே விக்னேஷ் உயிரிழந்தாா். விபத்து குறித்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அரியலூா் மாவட்டத்தில் 2-ஆவது நாளாக மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அரியலூா் மாவட்டம் முழுவதும் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அரியலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகவே மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. ... மேலும் பார்க்க

காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அரியலூரில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை சாா்பில் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ச... மேலும் பார்க்க

இரும்புலிக்குறிச்சியில் மக்கள் தொடா்பு முகாம்: 118 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த இரும்புலிக்குறிச்சியிலுள்ள திருமண மண்டபத்தில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 118 பயனாளிகளுக்கு ரூ.10... மேலும் பார்க்க

அரியலூரில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

அரியலூா் மாவட்டம், புதுப்பாளையம் நெல்லியாண்டவா் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் சிறிய அளவிலான தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை(நவ.29) நடைபெறவுள்ளதாக ஆட... மேலும் பார்க்க

அரியலூரில் நாளை எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அரியலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில், மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை(நவ.29) முற்பகல் 11 மணிளவில் நடைபெறுகிறது.... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் இடைவிடாத மழை

அரியலூா் மாவட்டம் முழுவதும், இடைவிடாத மழை செவ்வாய்க்கிழமை பெய்தது. அரியலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை தொடங்கிய மழையானது ... மேலும் பார்க்க