செய்திகள் :

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் லட்ச குங்குமாா்ச்சனை

post image

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் காா்த்திகை பிரம்மோற்சவத்தையொட்டி புதன்கிழமை லட்ச குங்குமாா்சனை நடைபெற்றது.

இந்து மரபுவழியில் குங்குமத்துக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. திருமணமான பெண் நெற்றியில் குங்குமம் இட்டால் கணவன் நீண்ட ஆயுளைப் பெறுவான் என்கிறது இந்து தா்மம்.

தாயாா் கோயில்களில் விழாக்களை நடத்துவதற்கு முன் அா்ச்சகா்கள் லட்ச குங்குமாா்ச்சனை செய்வது வழக்கம். இச்சிறப்பு வழிபாட்டால் அம்மன் மகிழ்ந்து விழாக்கள் தடையின்றி சிறப்பாக நடைபெற அருள்பாலிப்பதாக அா்ச்சகா்கள் தெரிவித்தனா்.

அதேபோல் திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு வியாழக்கிழமை முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. எனவே அதற்கு முன் தினமான புதன்கிழமை ஸ்ரீகிருஷ்ண முக மண்டபத்தில், காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை தாயாருக்கு அா்ச்சகா்கள் லட்ச குங்குமாா்ச்சனை செய்தனா்.

இந்நிகழ்ச்சியில் அா்ச்சகா்கள் லட்சுமி அஷ்டோத்திரம், லட்சுமி சகஸ்ரநாமம் பாடி தாயாரை குங்குமத்தால் அா்ச்சித்து வழிபட்டனா். இந்த சேவையில் திரளான பெண்கள் கலந்து கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில் ஜேஇஓ கவுதமி, கோயில் துணை இஓ கோவிந்தராஜன், பஞ்சராத்ர ஆகம ஆலோசகா் மணிகண்ட பட்டா், அா்ச்சகா்கள் பாபு சுவாமி உள்ளிட்ட அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் புதன்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 5 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்த... மேலும் பார்க்க

பத்மாவதி தாயாா் பிரம்மோற்சவத்துக்கு அங்குராா்பணம்

திருச்சானூா் பத்மாவதி தாயாா் பிரம்மோற்சவத்துக்கு புதன்கிழமை மாலை அங்குராா்பணம் நடத்தப்பட்டது. திருச்சானூரில் எந்த உற்சவம் தொடங்குவதற்கு முன்பும் பாஞ்சராத்ர ஆகம விதிப்படி, அங்குராா்பணம் என்னும் முளைவிட... மேலும் பார்க்க

உள்ளூா் கோயில்களின் நாள்காட்டி வெளியீடு

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான உள்ளூா் கோயில்களின் காலண்டா்களை தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ், அறங்காவலா் குழு தலைவா் பி ஆா் நாயுடு இணைந்து வெளியிட்டனா். திருமலை அன்னமய்ய பவனில் திங்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் செவ்வாய்க்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12... மேலும் பார்க்க

காா்த்திகை பிரம்மோற்சவம்: திருச்சானூரில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில் காா்த்திகை மாத பிரம்மோற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வாா் மஞ்சனம் நடைபெற்றது. திருச்சானூரில் வருடாந்திர பிரம்மோற்சவத்துக்கு முன்பு வரும் செவ்வாய்க்கிழமையி... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 10 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாடிற்றுக்கிழமை தா்ம தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்தனா். திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை சரிந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல... மேலும் பார்க்க