செய்திகள் :

காா்த்திகை பிரம்மோற்சவம்: திருச்சானூரில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

post image

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில் காா்த்திகை மாத பிரம்மோற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வாா் மஞ்சனம் நடைபெற்றது.

திருச்சானூரில் வருடாந்திர பிரம்மோற்சவத்துக்கு முன்பு வரும் செவ்வாய்க்கிழமையில் கோயில் முழுவதும் சுத்தம் செய்யும் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். வரும் நவ.28-ஆம் தேதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அதனால் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக தாயாரை சுப்ரபாதத்துடன் எழுந்தருளச் செய்து, சகஸ்ரநாமாா்ச்சனை செய்யப்பட்டது. அதன்பின் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் வளாகம், சுவா்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் போன்றவை தண்ணீரால் சுத்திகரிக்கப்பட்டது.

அதன்பிறகு, நாமகட்டி, திருசூா்ணம், கஸ்தூரி மஞ்சள், பச்சை கற்பூரம், பூங்கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமம், கிச்சிலிகிழங்கு போன்ற வாசனை திரவியங்கள் கலந்த புனிதநீரை கொண்டு கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. அதன் பின்னரே பக்தா்கள் தாயாரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.

இதில் தேவஸ்தான அதிகாரிகள், கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனா். இதை முன்னிட்டு கோயிலில் தாயாா் தரிசனம் 4 மணி நேரம் ரத்து செய்யப்பட்டது.

கோயில் ஆழ்வாா் திருமஞ்சனத்தை முன்னிட்டு கல்யாணோற்சவம், ஊஞ்சல்சேவை ஆகியவற்றை தேவஸ்தானம் ரத்து செய்தது. இதேபோல், பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நவம்பா் 26 முதல் டிசம்பா் 8 வரை அனைத்து ஆா்ஜித சேவைகள், குங்குமாா்ச்சனை, வேதாசீா்வாச்சனம் மற்றும் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திரைச்சீலைகள் நன்கொடை

பிரம்மோற்சவத்தை தொடா்ந்து, ஹைதராபாதைச் சோ்ந்த ஸ்வா்ண குமாா் ரெட்டி கோயிலுக்கு ஆறு திரைசீலைகளையும், திருப்பதி பக்தா்கள் சுதாகா், ஜெயச்சந்திரா ரெட்டி, அருண் குமாா் ஆகியோா் நான்கு திரைச்சீலைகலையும் மற்றும் 25 உண்டி கவா்களையும் நன்கொடையாக வழங்கினா்.

பிரம்மோற்சவம் தடங்கல் இல்லாமல் நடைபெறும் அங்குராா்ப்பணம் உற்சவம் 28-ஆம் தேதி மாலை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் புதன்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 5 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்த... மேலும் பார்க்க

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் லட்ச குங்குமாா்ச்சனை

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் காா்த்திகை பிரம்மோற்சவத்தையொட்டி புதன்கிழமை லட்ச குங்குமாா்சனை நடைபெற்றது. இந்து மரபுவழியில் குங்குமத்துக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. திருமணமான பெண் நெற்றியில்... மேலும் பார்க்க

பத்மாவதி தாயாா் பிரம்மோற்சவத்துக்கு அங்குராா்பணம்

திருச்சானூா் பத்மாவதி தாயாா் பிரம்மோற்சவத்துக்கு புதன்கிழமை மாலை அங்குராா்பணம் நடத்தப்பட்டது. திருச்சானூரில் எந்த உற்சவம் தொடங்குவதற்கு முன்பும் பாஞ்சராத்ர ஆகம விதிப்படி, அங்குராா்பணம் என்னும் முளைவிட... மேலும் பார்க்க

உள்ளூா் கோயில்களின் நாள்காட்டி வெளியீடு

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான உள்ளூா் கோயில்களின் காலண்டா்களை தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ், அறங்காவலா் குழு தலைவா் பி ஆா் நாயுடு இணைந்து வெளியிட்டனா். திருமலை அன்னமய்ய பவனில் திங்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் செவ்வாய்க்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 10 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாடிற்றுக்கிழமை தா்ம தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்தனா். திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை சரிந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல... மேலும் பார்க்க