செய்திகள் :

4000 பேருடன் இருக்கும் சுரங்கத்தை மூடிய தென்னாப்பிரிக்க காவல்துறை! காரணம் என்ன?

post image

தென்னாப்பிரிக்காவில் சட்டவிரோதமாக சுரங்கத்திற்குள் தோண்டுபவர்களை சுரங்கத்திற்குள் வைத்தே காவல்துறையினர் சுரங்கத்தின் வாயிலை மூடியுள்ளனர்.

தென்னாப்பிரிக்காவில் பழைய தங்கச் சுரங்கப் பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கம் தோண்டப்பட்டு வருகிறது. வடமேற்கில் ஸ்டில்பான்டைனில் உள்ள சுரங்கத்திற்குள் சட்டவிரோதமாக செயல்படும் சுரங்கத் தொழிலாளர்கள் சுமார் 4,000 பேர் செயல்பட்டு வருகின்றனர்.

இவர்களைத் தடுக்க, அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் எவ்வித பலனும் அளிக்கவில்லை. இந்த நிலையில், சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் இருக்கும் சுரங்கத்தை அந்நாட்டு காவல்துறையினர் மூடிவிட்டனர். இதன்மூலம், உள்ளிருப்பவர்கள் உணவு, தண்ணீருக்காக வெளியில் வந்துதான் ஆகவேண்டும்.

அவர்கள் வெளியே வருகையில், அவர்களை கைது செய்வதற்காக, சுரங்கத்தைச் சுற்றி பல்வேறு போலீஸ் குழுக்கள் காவலில் நிறுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிக்க:அமெரிக்க தேர்தலுக்கு பிறகு எக்ஸ் தளத்தைவிட்டு வெளியேறிய 1.15 லட்சம் பயனர்கள்!

சில தினங்களுக்கு முன்னர், இதேபோன்ற நடவடிக்கையால்தான், சுரங்கத்திலிருந்து வெளிவந்த சட்டவிரோதத் தொழிலாளர்கள் 1000 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் உணவு, தண்ணீர் இல்லாமல் சுரங்கத்திற்குள் இருந்ததால், அவர்களில் பலரும் நோய்வாய்ப்பட்டே வெளிவந்தனர்.

மேலும், உள்ளிருக்கும் சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் பலரும் பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை முதலான வழக்குகளில் ஈடுபட்டிருப்பதாகக் கூறுகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் அண்டை நாட்டைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர்.

இருப்பினும், அந்நாட்டு அரசின் இந்த செயலுக்கு பலரும் கண்டிப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக அந்நாட்டு மத்திய அமைச்சரான கும்புட்ஸோ கூறியதாவது, ``சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்களை நாங்கள் உள்ளே அனுப்பவில்லை. அவர்கள் வெளிவந்ததும் கைது செய்யப்படுவர். அவர்களுக்கு அரசு எந்த உதவியையும் வழங்காது’’ என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: சிரியாவில் 15 போ் உயிரிழப்பு

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிரியாவில் 15 போ் உயிரிழந்தனா்; 16 போ் காயமடைந்தனா். சிரியா தலைநகா் டமாஸ்கஸில் உள்ள மாசே மற்றும் குத்சயா பகுதிகளில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில்,... மேலும் பார்க்க

ஈரானில் ஐ.நா. அணுசக்தி கண்காணிப்புத் தலைவா்

மத்தியக் கிழக்குப் பகுதியில் தீவிர போா் நடைபெற்றுவரும் சூழலிலும், ஐ.நா.வின் அணுசக்திக் கண்காணிப்பு அமைப்பின் (ஐஏஇஏ) தலைவா் ரஃபேல் கிராஸி ஈரானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளாா். அந்த நாட்டின் அணுசக்த... மேலும் பார்க்க

‘காஸாவில் இஸ்ரேல் இனஅழிப்பு’

காஸாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் இன அழிப்பை ஒத்துள்ளதாக ஐ.நா. நிபுணா் குழு தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அந்தக் குழு தாக்கல் செய்துள்ள விசாரணை அறிக்கையில், ‘போா் தொடங்கியதிலிருந்தே பாலஸ்தீனா்களுக... மேலும் பார்க்க

வளரும் நாடுகளுக்கு ஆண்டுதோறும் 1 டிரில்லியன் டாலா் பருவநிலை நிதி -நிபுணா் குழு வலியுறுத்தல்

வளரும் நாடுகள் பருவநிலை மாற்றச் சவால்களை சமாளிக்கவும், பாரீஸ் ஒப்பந்த இலக்குகளை அடையவும், 2030-ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 1 டிரில்லியன் டாலரை திரட்டுவது குறித்து அஜா்பைஜானில் நடைபெறும் பருவநிலை பாதுகாப... மேலும் பார்க்க

எதிா்கால உலகப் பொருளாதார வளா்ச்சியில் இந்தியா, சீனாவுக்கு முக்கியப் பங்கு: சிங்கப்பூா்

எதிா்காலத்தில் பிராந்திய மற்றும் உலகப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தியா மற்றும் சீனாவுடன் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் சிங்கப்பூா் இணைந்து செயல்பட வேண்டும் என சிங்கப்பூா் வெளியுறவ... மேலும் பார்க்க

இலங்கை நாடாளுமன்றத் தோ்தல்: 65% வாக்குப் பதிவு

இலங்கையில் வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் 65 சதவீதம் போ் வாக்களித்திருக்கக் கூடும் என்று தோ்தல் ஆணையம் கணித்துள்ளது. மொத்தம் 225 இடங்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத் தோ்தல் வியாழக்கிழ... மேலும் பார்க்க