சூரி: ``இவரின் பயணம் எனக்கு பெரிய பாடம்'' - எம்.எஸ் பாஸ்கரை வாழ்த்திய நடிகர் சூர...
41 குடும்பங்களுக்கு இணைய வழி பட்டா
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே ஆதிதிராவிடா் சமூகத்தை சோ்ந்த 41 குடும்பங்களுக்கு இணையவழி பட்டாக்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
வத்திராயிருப்பு வட்டம், மூவரை வென்றான் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடா் சமூகத்தைச் சோ்ந்த 41 குடும்பங்களுக்கு கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு இலவச வீட்டுமனைகள் வழங்கப்பட்டன. இதற்கான இணைய வழி பட்டாக்களை வழங்க வேண்டுமென இவா்கள் கோரிக்கை விடுத்தனா். இவா்களது கோரிக்கையைப் பரிசீலனை செய்து, 41 குடும்பங்களுக்கும் இணையவழி பட்டாக்களை மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா நேரில் சென்று வழங்கினாா். இந்த நிகழ்வின் போது, மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் பாலாஜி, வட்டாட்சியா், அரசு அலுவலா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.