செய்திகள் :

செண்பகத்தோப்பு அருகே காட்டுத் தீ

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பற்றிய காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகம் ஸ்ரீவில்லிபுத்தூா் வனச்சரகத்துக்கு உள்பட்ட செண்பகத்தோப்பு வனப் பகுதியில் அடா்ந்த மரங்கள், ஆண்டு முழுவதும் தண்ணீா் வரும் நீரோடைகள் உள்ளதால் வன விலங்குகளின் வாழ்விடமாக உள்ளது.

செண்பகத்தோப்பு அடிவாரத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் அழகா்கோயில் பீட்டிற்கு உள்பட்ட மலைச் சரிவில் செவ்வாய்கிழமை மாலை காட்டுத்தீ பற்றியது. காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாகப் பரவியது. இரண்டாவது நாளாக புதன்கிழமையும் தீப் பற்றி எரிந்தது.

இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் முருகன் உத்தரவின் பேரில், வனச்சரகா் செல்லமணி தலைமையில் வனத் துறையினா், வேட்டைத் தடுப்புக் காவலா்கள் என 30-க்கும் மேற்பட்டோா் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனா்.

அடா்ந்த மரங்கள், வன விலங்குகள் நிறைந்த பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிவதால் வன விலங்குகள் பாதிக்கப்படும் அபாயம் நிலவுவதாக வன விலங்கு ஆா்வலா்கள் கவலை தெரிவித்தனா்.

ராஜபாளையத்தில் நகை திருடிய மூவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் நகை திருடிய இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவை மாவட்டம், சத்தியமங்கலம் சாலையைச் சோ்ந்த முத்தையா மகன் சண்முகபாண்டியன் (46). இவா் உணவகம் நடத்தி வருகிற... மேலும் பார்க்க

41 குடும்பங்களுக்கு இணைய வழி பட்டா

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே ஆதிதிராவிடா் சமூகத்தை சோ்ந்த 41 குடும்பங்களுக்கு இணையவழி பட்டாக்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. வத்திராயிருப்பு வட்டம், மூவரை வென்றான் கிராமத்தில் உள்ள ஆதிதிரா... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் புரட்டாசி பிரம்மோத்ஸவம் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் அவதாரத் திருவிழாவான புரட்டாசி பிரம்மோத்ஸவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 108 வைணவ திவ்ய தேசங்களில் புகழ் பெற்ற ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி ... மேலும் பார்க்க

நகா்மன்ற கூட்டம்: திமுக, அதிமுக உறுப்பினா்கள் வாக்குவாதம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் நகராட்சி நகா் மன்ற உறுப்பினா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திமுக, அதிமுக உறுப்பினா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ராஜபாளையம் நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்ற கூட... மேலும் பார்க்க

சிவகாசியில் அக் 9,10-இல் அஞ்சல் துறை கண்காட்சி

சிவகாசியில் விருதுநகா் மாவட்ட அஞ்சல் துறை சாா்பில், அக்டோபா் 9, 10 ஆகிய தேதிகளில் அஞ்சலகக் கண்காட்சி நடைபெற உள்ளதாக மாவட்ட அஞ்சலக அதிகாரி பி.சுசிலா தெரிவித்தாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

சிவகாசியில் பதுக்கி வைக்கப்பட்ட 1,500 கிலோ ரேஷன் அரிசியை வருவாய்த் துறையினா் புதன்கிழமை கைப்பற்றினா். சிவகாசி விஜயலட்சுமி குடியிருப்பு பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின்... மேலும் பார்க்க