செய்திகள் :

50 காசுக்காக ரூ.15 ஆயிரத்து 50 காசு இழப்பீடு! அஞ்சல் துறைக்கு தண்டம்!

post image

உரிய கட்டணத்தைவிட அதிக கட்டணமாக 50 காசு வசூலித்த அஞ்சல் துறைக்கு ரூ.15 ஆயிரத்து 50 காசு இழப்பீடாக வழங்க மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி கெருகம்பாக்கத்தைச் சேர்ந்த மானஷா கடிதம் அனுப்புவதற்காக பொழிச்சலூரில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அவர் கடிதம் அனுப்புவதற்கு 29 ரூபாய் 50 காசுகள் செலவாகியுள்ளது. அங்கிருந்த தபால் நிலைய அலுவலர் முழுவதுமாக 30 ரூபாய் கொடுக்க சொல்லி வற்புறுத்தியுள்ளார். மானஷா தனது 50 காசை திரும்பக் கேட்டுள்ளார். அதற்கு கணினியில் முழுமையாக 30 ரூபாய் காட்டியதாக அலுவலர் தெரிவித்துள்ளார்.

மானஷா தான் யுபிஐ மூலமாக சரியான தொகையை (ரூ.29.50) செலுத்துவதாக அந்த அலுவலரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக யுபிஐயில் பணம் செலுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளார். இதனால் விரக்தியடைந்த மானஷா, மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து மானஷா கூறுகையில், “தினமும் லட்சக்கணக்கான பரிவர்த்தனைகளை செய்யும் இந்தியா போஸ்ட்டில், இதுபோன்று நம்மிடருந்து அதிகளவில் பணம் பறிப்பதற்கும் வழிவகுக்கும். இதுபோன்ற கறுப்பு பணம், ஜிஎஸ்டியால் அரசுக்கு அதிகளவில் வருவாய் இழப்பு ஏற்படலாம்” என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பதிலளித்துள்ள தபால் நிலைய அதிகாரிகள் 50 காசுகளுக்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் கணினியின் மென்பொருள் அதனை முழுமையாக எடுத்துக்கொண்டுள்ளது.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை நிராகரித்தது குறித்து தபால் நிலையம் தரப்பில் கூறுகையில், “2023 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 'பே-யு' க்யூ ஆர் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவையானது சரியாக இல்லை என்றும், இந்த ஆண்டு மே மாதம் அதன் சேவை நிறுத்தப்பட்டது” என்றும் தெரிவித்துள்ளது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நுகர்வோர் ஆணையம், மென்பொருள் கோளாறு காரணமாக அதிக கட்டணம் வசூலித்ததாக தபால் துறை ஒப்புக்கொண்டுள்ளது. இது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன் பிரிவு 2(47) கீழ் நியாமற்ற வர்த்தக நடைமுறையாகும். மேலும், மானஷாவுக்கு மன உலைச்சலை ஏற்படுத்தியதற்காக இழப்பீடாக ரூ. 10 ஆயிரமும், வழக்கு செலவுக்கு ரூ. 5,000-ம் அதோடு சேர்த்து அவருக்குத் திருப்பித் தரவேண்டிய 50 காசு வழங்கவும் தபால் நிலையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காமன்வெல்த் போட்டிகளை நடத்தாமல் இருப்பதே நல்லது! ப.சிதம்பரம்

பல்வேறு விளையாட்டுகள் இல்லாத காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தாமல் இருப்பதே நல்லது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதாக இருந்த காம... மேலும் பார்க்க

வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரியங்கா

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பிரியங்கா வதேரா (52), இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.வயநாடு மக்களவைத் தொகுதியில் வேட்புமனு ... மேலும் பார்க்க

வயநாடு மக்களுக்குச் சேவையாற்ற வாய்ப்பு தாருங்கள்: பிரியங்கா காந்தி

வயநாடு தொகுதியில் இன்று பிரியங்கா வேட்புமனு தாக்கல் செய்யவுள்ள நிலையில், அங்கு நடைபெற்றுவரும் பிரசாரக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி உரையாற்றி வருகிறார். கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியின் இடைத்த... மேலும் பார்க்க

திரிஷ்யம் பட பாணியில் பெண் கொலை! உடலை புதைத்த ராணுவ வீரர் கைது!

திரிஷ்யம் பட பாணியில் பெண்ணை கொலை செய்து சிமென்ட் தளத்தின்கீழ் புதைத்த ராணுவ வீரரை காவல்துறையினர் கைது செய்தனர். ராணுவவீரர்ராணுவ வீரரான அஜய் வான்கடே(33) மற்றும் ஜியோட்ஸ்னா ஆக்ரே (32) இருவரும் திருமண த... மேலும் பார்க்க

ரௌடி சோட்டா ராஜனின் தண்டனை நிறுத்திவைப்பு! ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்!

மும்பையில் கடந்த 2001-ஆம் ஆண்டு விடுதி உரிமையாளரைக் கொலை செய்த வழக்கில் பிரபல ரௌடி சோட்டா ராஜனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்தது.மேலும், ஒரு லட்சம் ரூபாய் பிணை உத... மேலும் பார்க்க

வயநாட்டில் ராகுல், பிரியங்கா பேரணி!

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை தாக்கல் செய்ய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேரணியாக செல்கிறார்.ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு மத்தியில... மேலும் பார்க்க