முருங்கை பவுடர், கேப்சூல்,தேநீர்; லாபத்துக்கு வழிகாட்டும் முருங்கை சாகுபடி, மதிப...
7 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ரஞ்சி டிராபியில் ரிஷப் பந்த்!
2024-25 ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபியின் இரண்டாவது சுற்றுக்கானப் போட்டியில் தில்லி அணிக்காக இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் விளையாடவிருக்கிறார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர் - கவாஸ்கர் தொடரில் சரியாக சோபிக்காத ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகினர். 6 இன்னிங்ஸ்களில் விளையாடி வெறும் 31 ரன்கள் மட்டுமே எடுத்தார் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா. விராட் கோலி ஒரு சதம் மட்டும் அடித்த நிலையில், மற்ற போட்டிகளில் சோபிக்கவில்லை. 9 இன்னிங்ஸ்களில் 190 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இதனால், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மட்டும் முன்னாள் ஜாம்பவான்கள், இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள், முன்னணி வீரர்கள் என்றில்லாமல், அனைவரும் உள்ளூர்ப் போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
வருகிற 23ஆம் தேதி நடைபெறவுள்ள சௌராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் தில்லி அணிக்காக ரிஷப் பந்த் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தில்லி ரஞ்சி அணியில் இடம்பிடித்துள்ள நட்சத்திர வீரர் விராட் கோலி விளையாடுவாரா? என இன்னும் உறுதிசெய்யப்படவில்லை என்று தில்லி கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. விராட் கோலி கடைசியாக 2012 ஆம் ஆண்டு ரஞ்சி டிராபியில் விளையாடியிருந்தார். ஆனால், ரிஷப் பந்த் விளையாடுவதை அவரே உறுதிபடுத்தியுள்ளார்.
கடந்த 2017-18 ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபிக்கான தொடரின் இறுதிப்போட்டியில் விதர்பா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார் பந்த். தில்லி அணி தற்போது 14 புள்ளிகளுடன் குரூப்-டி பிரிவில் மூன்றாம் இடம்பிடித்துள்ளது.
பந்தைத் தொடர்ந்து மற்ற இந்திய வீரர்கள் ஷுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் முறையே அவர்களின் அணியான பஞ்சாப் மற்றும் மும்பை அணியில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.