செய்திகள் :

ரஞ்சி டிராபிக்கான தமிழ்நாடு அணி அறிவிப்பு!

post image

2024-25 ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபிக்கான 15 பேர் கொண்ட தமிழக கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சாய் கிஷோர் கேப்டனாகவும், விக்கெட் கீப்பர் ஜெகதீசன் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல் கட்ட தொடரில் விளையாடிய ஆல்ரவுண்டர் ஷாரூக் கான், வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இரட்டைசதம் விளாசிய நட்சத்திர வீரர் சாய் சுதர்சன் காயம் காரணமாக அறுவைச் சிகிச்சை மேற்கொண்டதால் அவர் அணியில் இடம்பெறவில்லை.

இதையும் படிக்க | ஐசிசி டிசம்பர் மாத சிறந்த வீரர் விருதை வென்றார் பும்ரா!

முந்தைய சுற்றுகளில் விளையாடி ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டி தொடரில் விளையாடவிருப்பதால், அணியில் இடம்பெறவில்லை.

5 போட்டிகளில் வெற்றியுடன் 19 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ள தமிழக அணி, இறுதிச் சுற்றில் சண்டீகர் மற்றும் ஜார்க்கண்ட் அணிகளை எதிர்கொள்ளவிருக்கிறது.

தமிழ்நாடு அணி: ஆர்.சாய் கிஷோர் (கேப்டன்), என்.ஜெகதீசன் (துணை கேப்டன்), விஜய் சங்கர், பாபா இந்தர்ஜித், முகமது அலி, ஆண்ட்ரே சித்தார்த், பிரதோஷ் ரஞ்சன் பால், பூபதி வைஷ்ண குமார், அஜித் ராம், லக்‌ஷய் ஜெயின், லோகேஷ்வர், சந்தீப் வாரியர், திரிலோக் நாக், சித்தார்த், முகமது.

இதையும் படிக்க | மும்பை ரஞ்சி அணியுடன் ரோஹித் சர்மா பயிற்சி!

435 ரன்கள் குவித்த இந்திய மகளிரணி! வாணவேடிக்கை காட்டிய ஸ்மிருதி, பிரதிகா!

அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிரணி 435 ரன்கள் குவித்தது.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில... மேலும் பார்க்க

70 பந்துகளில் அதிரடி சதம்! புதிய சாதனை படைத்தார் ஸ்மிருதி மந்தனா!

70 பந்துகளில் அதிரடி சதம் விளாசிய இந்திய மகளிரணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வி... மேலும் பார்க்க

7 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ரஞ்சி டிராபியில் ரிஷப் பந்த்!

2024-25 ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபியின் இரண்டாவது சுற்றுக்கானப் போட்டியில் தில்லி அணிக்காக இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் விளையாடவிருக்கிறார்.இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார... மேலும் பார்க்க

தொடரை முழுமையாக வெல்லுமா இந்தியா? டாஸ் வென்று பேட்டிங்!

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள்தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இந்திய மகளிரணி அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு... மேலும் பார்க்க

ஐசிசி டிசம்பர் மாத சிறந்த வீரர் விருதை வென்றார் பும்ரா!

ஐசிசி டிசம்பர் மாத சிறந்த வீரர் விருதை ஜஸ்பிரித் பும்ரா வென்றுள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்... மேலும் பார்க்க

மும்பை ரஞ்சி அணியுடன் ரோஹித் சர்மா பயிற்சி!

ரஞ்சி கோப்பை தொடங்குவதற்கு தயாராகி வரும் நிலையில், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மும்பை அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டார்.இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர் - கவாஸ்கர் தொடரில் சரியாக சோபிக்காத... மேலும் பார்க்க