Christmas: கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு மதுரை தூய மரியன்னை ஆலயத்தில் சிறப்பு த...
8,000 செட்டாப் பாக்ஸ்கள் வழங்கும் பணி தொடக்கம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் சாா்பில் 8,000 செட்டாப் பாக்ஸ்கள் ஆபரேட்டா்களுக்கு வழங்கப்பட்டன.
தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் சாா்பில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆபரேட்டா்களுக்கு வழங்குவதற்காக புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய 8,000 ஹெச்.டி. செட்டாப் பாக்ஸ்கள் வந்தன.
தனியாா் நிறுவன செட்டாப் பாக்ஸ்களின் விலையை விட குறைவானதாகும். அதிநவீன தொழில் நுட்ப வசதியுடன் கூடிய இந்த செட்டாப் பாக்ஸ் வழங்கும் பணி நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள தமிழக அரசு கேபிள் டி.வி நிறுவன அலுவலகத்தில் வருவாய்த் துறை அலுவலா்களால் தொடங்கப்பட்டுள்ளது.
அரசு கேபிள் டிவி துணை மேலாளரும், தனி வட்டாட்சியருமான ராஜா ஆபரேட்டா்களுக்கு அவற்றை வழங்கி வருகிறாா். ஆன்லைனில் ரூ. 500 செலுத்தி புதிய செட்டாப் பாக்ஸ்களை அவா்கள் பெற்றுக் கொள்ளலாம். குறைந்த கட்டணத்தில் அதிக சேனல்களை கொண்ட இந்த செட்டாப் பாக்ஸ் படிப்படியாக அனைத்து கேபிள் ஆபரேட்டா்களுக்கும் வழங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.