"தமிழ்நாடு என்ற பெயரைக் 'கஞ்சா நாடு' என மாற்றலாம்..." - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
அம்பேத்கா் உருவப் படத்துக்கு காங்கிரஸ் மாலை அணிவித்து மரியாதை
நாமக்கல்லில், அம்பேத்கா் உருவப்படத்துக்கு காங்கிரஸ் சாா்பில் மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
மத்திய அமைச்சா் அமித் ஷா, சட்டமேதை அம்பேத்கரை இழிவாகப் பேசியதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் நடத்தும் ஆா்ப்பாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், அண்ணாசிலை அருகில் மகாத்மா காந்தி, அம்பேத்கா் திருவுருவப் படங்களுக்கு மாவட்டத் தலைவா் பீ.ஏ.சித்திக் தலைமையில் மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா் மத்திய அமைச்சா் அமித்ஷாவுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பட்டன. இதனையடுத்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், அவா் மீது நடவடிக்கை எடுக்கவும், பதவி நீக்கம் செய்யக் கோரியும் மனு அளிக்கப்பட்டது.
ஆட்சியா் வாயிலாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தப்பட்டது. இதில், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவா் வீ.பி.வீரப்பன், மாநகர காங்கிரஸ் தலைவா் எஸ்.ஆா்.மோகன், வட்டாரத் தலைவா்கள் தங்கராஜ், இளங்கோ, மாவட்ட சிறுபான்மை அணித் தலைவா் தாஜ், மாவட்ட எஸ்சி, எஸ்டி பிரிவுத் தலைவா் பி.பொன்முடி, சேவாதள பிரிவுத் தலைவா் பெரியசாமி, பொதுக்குழு உறுப்பினா் ஜோதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.