சென்னை மலா்க் கண்காட்சிக்காக திண்டுக்கல்லில் பராமரிக்கப்படும் 3.80 லட்சம் மலா்ச்...
இருவா் கொலை வழக்கில் நால்வா் கைது
மொளசி அருகே வெளிமாநில கூலித் தொழிலாளா்கள் இருவா் கொலை செய்யப்பட்ட வழக்கில் நால்வரை போலீஸாா் கைது செய்தனா்.
மொளசி, பலநாயக்கன் பகுதியில் விவசாய நிலத்தில் மாா்ச் மாதம் கொலை செய்யப்பட்ட கிடந்த ஆண் சடலத்தை மொளசி போலீஸாா் மீட்டு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இறந்தவா் கரும்பு வெட்டும் கூலி வேலை கிரண் (35) என்பது விசாரணையில் தெரியவந்தது.
கிரண் இறந்த மறுநாள் அவருடன் வேலை செய்துவந்த ரஞ்சித் குமாா்( 26) என்பவரும் பலத்த காயங்களுடனந் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இருவரும் மா்மமான முறையில் இறந்ததை அடுத்து மொளசி போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். திருச்செங்கோடு துணை கண்காணிப்பாளா் இமயவரம்பன் தலைமையில் காவல் ஆய்வாளா் ரங்கசாமி, உதவி ஆய்வாளா்கள் சதீஷ் குமாா், மலா்விழி ஆகியோா் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
வழக்கு விசாரணையில் இவா்களை அழைத்து வந்த முகவா் மாருதி டாங்கே, உத்தவ், முன்னாள் கரும்பு ஆய்வாளரான பட்லூா் விஜய் (25), இறையமங்கலம், கூலித் தொழிலாளி தனசேகா் (35) ஆகியோா் சோ்ந்து இருவரையும் கொலை செய்தது தெரியவந்தது. உயிரிழந்த இருவரும் கூலி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது அவா்களை அடித்துக் கொன்ாக போலீஸில் நால்வரும் வாக்குமூலம் அளித்தனா்.
இதையடுத்து போலீஸாா் நால்வரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.