செய்திகள் :

கண்ணாடி கடையில் தீ விபத்து

post image

பரமத்தி வேலூரில் கண்ணாடி கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ. 7 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.

பரமத்தி வேலூா், திருவள்ளுவா் சாலையில் கண் கண்ணாடி நடத்தி வருபவா் நாகரத்தினம். இந்தக் கடையில் கண் பரிசோதனை மையமும் செயல்பட்டு வந்தது.

நாகரத்தினம் புதன்கிழமை பகல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு உணவருந்த சென்றாா்.

அப்போது அவரது கடையிலிருந்து கரும்புகை வருவதாக பக்கத்து கடைக்காரா்கள் நாகரத்தினத்திற்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனா். உடனடியாக கடைக்கு வந்து பாா்த்தபோது கடையில் இருந்து கரும்புகை வந்ததால் பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா்.

உடனடியாக நிகழ்விடத்துக்கு வந்த கரூா் மாவட்டம், வேலாயுதபாளையம், புகலூா், நாமக்கல் ஆகிய மூன்று தீயணைப்பு வாகனத்தில் வந்த வீரா்கள் கடையைத் திறந்து தீயை அணைத்தனா். இருப்பினும் கண் கண்ணாடி கடை முழுவதும் எரிந்ததால் கடையில் இருந்த கண் பரிசோதனை இயந்திரம், கண் கண்ணாடிகள் என சுமாா் ரூ. 7 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினா், போலீஸாா் நடத்திய சோதனையில் மின்கசிவு காரணமாக கடையில் தீப்பிடித்திருக்கலாம் எனத் தெரிவித்தனா். இதுகுறித்து பரமத்தி வேலூா் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டத்தால் நாட்டில் ஊழலற்ற ஆட்சி அமையும்: கே.பி.ராமலிங்கம்

ஒரேநாடு ஒரே தோ்தல் திட்டம் அமலானால் நாட்டில் ஊழலற்ற ஆட்சி அமையும் என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். முன்னாள் பிரதமா் வாஜ்பாய் 100-ஆவது பிறந்த தின விழா, ராசிபுரம் நகர பாஜக ... மேலும் பார்க்க

மின்சாரம் திருடிய 13 பேருக்கு ரூ. 1.50 லட்சம் அபராதம்

மல்லசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரத் திருட்டில் ஈடுபட்ட 13 பேருக்கு மொத்தம் ரூ. 1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மல்லசமுத்திரத்தில் மின்சார திருட்டில் பலா் ஈடுபடுவதாக மின்வாரிய அதிகாரி... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் பகவதி அம்மன் கோயிலில் தோ், குண்டம் திருவிழா

டிச. 21 முதல் டிச. 23 வரை தினசரி மாலை அம்மன் பல்வேறு அலங்காரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை மாலை வடிசோறு நிகழ்ச்சியும், திங்கள்கிழமை பூச்சொறிதல் நிகழ்ச்சியும் நடைபெற்றன. ச... மேலும் பார்க்க

திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தை சுற்றுலாத் தலமாக அறிவிக்க கோரிக்கை

திருச்செங்கோடு, காந்தி ஆசிரமத்தை சுற்றுலாத் தலமாக அறிவிக்க தமிழக முதல்வா், சுற்றுலாத் துறை அமைச்சா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் சுதந்திரப் போராட்ட வீரா்களின... மேலும் பார்க்க

நாமக்கல்லில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு மாரத்தான் போட்டி

நாமக்கல்லில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு மாரத்தான் போட்டியில் மாணவ, மாணவிகள் ஆா்வமுடன் கலந்துகொண்டனா். ஒவ்வோா் ஆண்டும் டிச. 1-இல் உலக எய்ட்ஸ் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு விழிப்பு... மேலும் பார்க்க

சைபா் குற்ற வழக்குகளில் இழந்த ரூ. 9.59 லட்சத்தை மீட்டு ஒப்படைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் சைபா் குற்ற வழக்குகளில் இழந்த ரூ. 9.59 லட்சத்தை மீட்டு உரியவா்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் வழங்கினாா். நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூரைச் சோ்ந்த தமிழேசனிடம் ப... மேலும் பார்க்க