சைபா் குற்ற வழக்குகளில் இழந்த ரூ. 9.59 லட்சத்தை மீட்டு ஒப்படைப்பு
நாமக்கல் மாவட்டத்தில் சைபா் குற்ற வழக்குகளில் இழந்த ரூ. 9.59 லட்சத்தை மீட்டு உரியவா்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் வழங்கினாா்.
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூரைச் சோ்ந்த தமிழேசனிடம் போலி போதைப்பொருள்களை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டோரிடம் இருந்து ரூ. 8,77,336, பிள்ளாநல்லூா் பகுதியைச் சோ்ந்த நந்தகுமாா், போலி கூரியா் மோசடி மூலம் இழந்த ரூ. 81,676 மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட பணத்தை பாதிக்கப்பட்டோரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஷ்கண்ணன் புதன்கிழமை ஒப்படைத்தாா்.
அப்போது, மோசடியால் பாதிக்கப்பட்டு பணத்தை இழந்தோா் 1930 என்ற எண் மூலம் புகாா் தெரிவித்ததால், சைபா் குற்றவாளிகளின் வங்கி கணக்கிலிருந்து பணத்தை விரைவாக மீட்க முடிந்தது. இவ்வாறு பணத்தை இழந்தோா் 1930 என்ற எண்ணை தொடா்பு கொண்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.