பேராவூரணி அருகே சாலை மேம்பாட்டு பணிகள் தொடக்கம்
பேராவூரணி ஒன்றியம், பைங்கால் ஊராட்சியில் உள்குடியிருப்பிற்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 11.27 லட்சத்தில் தாா்ச்சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ என். அசோக்குமாா் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் பேராவூரணி தெற்கு ஒன்றிய திமுக செயலா் க. அன்பழகன், வட்டார வளா்ச்சி அலுவலா் ம. சாமிநாதன், ஊராட்சித் தலைவா் அமுதா சுப்பிரமணியன், துணைத் தலைவா் திருஞானம், மாவட்ட பிரதிநிதி கவிஞா் மா.பா , பொதுக்குழு உறுப்பினா் அ. அப்துல் மஜீத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.