Doctor Vikatan: சாட்டையடி, உண்ணாவிரதம்.... தன்னைத்தானே வருத்திக்கொள்வது எத்தகைய ...
ரூ. 8.61 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
பரமத்தி வேலூா், பொத்தனூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 8.61 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் போனது.
கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 4,144 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 142.69-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 127.89-க்கும், சராசரியாக ரூ. 139.66-க்கும் ஏலம் போனது. இரண்டாம் தர கொப்பரை அதிகபட்சமாக ரூ. 122.499-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 106.99-க்கும், சராசரியாக ரூ. 115.09-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 5 லட்சத்து 26 ஆயிரத்து 280-க்கு ஏலம் போனது.
இந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 6 ஆயிரத்து 475 கிலோ கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 146.67-க்கும், குறைந்த பட்சமாக ரூ. 133.89-க்கும், சராசரியாக ரூ. 145.10-க்கும் ஏலம் போனது. இரண்டாம் தர கொப்பரை அதிகபட்சமாக ரூ. 127.88-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 103.99-க்கும், சராசரியாக ரூ. 115.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 8 லட்சத்து 61 ஆயிரத்து 175- க்கு கொப்பரை ஏலம் போனது.