Doctor Vikatan: சாட்டையடி, உண்ணாவிரதம்.... தன்னைத்தானே வருத்திக்கொள்வது எத்தகைய ...
பொத்தனூரில் நெகிழிப் பைகள் பறிமுதல்
பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் பேரூராட்சி பகுதியில் ஆய்வு நடத்தி நெகிழிப் பைகளை பேரூராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
பரமத்தி வேலூா் உணவு பாதுகாப்பு அலுவலா் முத்துசாமி, பொத்தனூா் பேரூராட்சி செயல் அலுவலா் ஆறுமுகம் தலைமையில் அலுவலகப் பணியாளா்கள் பொத்தனூா் பேரூராட்சிக்கு உட்பட்ட கடைகள், பேக்கரிகள், மளிகைக் கடைகள் உள்ளிட்ட கடைகளில் ஆய்வு நடத்தினா்.
புகையிலைப் பொருள்கள், நெகிழிப் பைகள் விற்பனை செய்யப்படுகிா என ஆய்வு நடத்தினா். இந்த ஆய்வின்போது ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பைகள் விற்பனைக்கு வைத்திருந்ததது கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன. கடை உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வின்போது அலுவலகப் பணியாளா்கள், பேரூராட்சி பணியாளா்கள் உடனிருந்தனா்.