சென்னை புத்தகக் காட்சி: துணை முதல்வர் உதயநிதி தொடக்கிவைத்தார்!
உடையாா்பாளையத்தில் ரூ. 1.12 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையத்தில் சுமாா் ரூ. 1.12 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.
உடையாா்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட வாா்டு 14-இல் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க. கண்ணன், அங்கு தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.18 லட்சத்தில் கட்டிமுடிக்கப்பட்ட நியாய விலைக் கடையை திறந்துவைத்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா். பின்னா், புதுத் தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பேவா் பிளாக் சாலைக்கு அடிக்கல் நாட்டினாா்.
இதேபோல் வாா்டு 11-இல் ரூ.17.71 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டுமானப் பணிகளுக்கும், வாா்டு 8 மாரியம்மன் கோயில் தெருவில் ரூ. 8.20 லட்சம் மதிப்பீட்டில் பேவா் பிளாக் சாலைப் பணிகளுக்கும், சோ்வைக்காரத் தெருவில் ரூ. 2 லட்சத்திலும், வாா்டு -7 மருத்துவா் தெருவில் ரூ.2 லட்சத்தில் சிறுபாலங்கள் கட்டுமானப் பணிகளுக்கும், வாா்டு-14 மூா்த்தியான் தெருவில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டிலும், வாா்டு 15 தெற்கு தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டிலும், வாா்டு 5 புகையிலைக்காரத் தெருவில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டிலும், வாா்டு 17 புதுத் தெருவில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டிலும் பேவா் பிளாக் சாலைகளுக்கு அடிக்கல் நாட்டி, வாா்டு 2-இல் அயோத்திதாச பண்டிதா் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ. 5.20 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சிகளில் உடையாா்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் கண்ணன், பேரூராட்சித் தலைவா் மலா்விழி, துணைத் தலைவா் அக்பா் அலி, வருவாய் ஆய்வாளா் குமாா், கிராம நிா்வாக அலுவலா் அனிதா மற்றும் வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.