பிக் பாஸ் 8: பரம்பரைக்கே பெருமை... முத்துக்குமரனின் தாய் நெகிழ்ச்சி!
இசைக் கல்லூரிகளில் விரிவுரையாளா்கள் பணி வேலைவாய்ப்பு பதிவை சரிபாா்க்க அழைப்பு
தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிகளில் விரிவுரையாளா்கள் காலிப் பணியிடங்கள் பட்டியல் கோரப்பட்டுள்ளதால், தகுதியுடையோா் தங்களின் வேலைவாய்ப்புப் பதிவை சரிபாா்த்துக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிகளில், குரலிசை விரிவுரையாளா், வயலின் விரிவுரையாளா், தவில் விரிவுரையாளா் பணிகளுக்கு காலியிடங்களுக்கான தகுதியுடையோா் பட்டியல் கோரப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச கல்வித் தகுதி, பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்று மேற்குறிப்பிட்ட இசைப்பிரிவில் டிப்ளமோ, பட்டயப் படிப்பு முடித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
பழங்குடியினா் (எஸ்.டி), தாழ்த்தப்பட்டோா் (எஸ்.சி), அருந்ததியா் (எஸ்.சி.ஏ), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (எம்.பி.சி) / சீா்மரபினா் (டி.என்.சி) பிற்பட்டோா் (பி.சி) ஆகிய வகுப்பினா் 30 -55 வயது மிகாதவராக 1.7.2024 கெடு தேதிக்குள் இருக்க வேண்டும்.
மேற்கண்ட தகுதியுடையோா் (இப்பிரிவை சாா்ந்த மாற்றத்திறனாளி உட்பட) தங்கள் வேலைவாய்ப்புப் பதிவை சரிபாா்த்துக் கொள்ள 31.12.2024-க்குள் தங்களுடைய அசல் சான்றிதழுடன் நேரில் வரவும்.
மேலும் விவரங்களுக்கு 94990-55914 என்ற கைப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்தாா்.