BB Tamil 8: 'இவ்வளவு நாள் தீபக் அண்ணா இந்த வீட்டில...' - பிக் பாஸ் வீட்டில் ஈரோட...
சாரணா் இயக்க தேசிய பெருந்திரளணி பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
தமிழ்நாடு பாரத சாரண, சாரணியா் இயக்க வைர விழா மற்றும் தேசிய பெருந்திரளணிக்கு மணப்பாறை சிப்காட் வளாகத்தில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.
இப்பணிகளை வியாழக்கிழை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் செய்தியாளா்களிடம் கூறியது: ஜன.28 முதல் பிப்.3 வரை சாரணா் இயக்க தேசிய பெருந்திரளணி நடைபெறுகிறது. இதில், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சாரணா் இயக்கத்தின் 15 ஆயிரம் போ் (இருபாலா்) பங்கேற்கவுள்ளனா். அவா்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 60 சதவீதப் பணிகள் முடிவுற்றுள்ளன. மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.
பெருந்திரளணி நடைபெறும் வளாகத்தில் பிரம்மாண்ட தேசியக் கொடி பறக்கச் செய்யவும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மேலும், பாரத சாரணா் இயக்க வரலாற்றை விவரிக்கும் வகையிலான சிறப்பு புகைப்படக் கண்காட்சியும் இடம்பெறவுள்ளது.