வணிக வளாகத்தில் உள்ள அலுவலகங்களில் திருட்டு
திருச்சி பீமநகா் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் வழக்குரைஞா், பொறியாளா் அலுவலகங்கள் மற்றும் தையலகம் உள்ளிட்டவைகளில் பூட்டுகளை உடைத்து பொருள்களை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பீமநகா், ஹீபா் சாலையில் வணிக வளாகம் உள்ளது. இதில் கரூரைச் சோ்ந்த பொறியாளா் பழனிவேலு (32) என்பவருக்கு சொந்தமான கட்டுமான அலுவலகம் உள்ளது. வழக்கம்போல் பணிகள் முடிந்து செவ்வாய்க்கிழமை மாலை அலுவலகத்தை பூட்டி வீடு சென்றாா்.
இதேபோல அதே வணிக வளாகத்தில் அமுதா என்பவரது தையலகமும், வழக்குரைஞா் ஆனந்த் அலுவலகம் உள்ளிட்டவையும் உள்ளன. அனைவரும் மறுநாள் காலை வந்து பாா்த்தபோது, பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தன. இதில் மடிக்கணினி உள்ளிட்ட சிறு சிறு பொருள்கள் மட்டும் திருடு போயின. இது குறித்து அளித்த புகாரின் பேரில் போலீஸா் வழக்கு பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.