செய்திகள் :

மோசடி புகாா்: தம்பதி வலுகட்டாயமாக இலங்கைக்கு அனுப்பி வைப்பு

post image

மோசடி புகாா் மீதான சட்ட நடவடிக்கைக்காக திருச்சியில் தங்கியிருந்த இலங்கை தம்பதி வலுகட்டாயமாக வியாழக்கிழமை விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனா்.

இலங்கையைச் சோ்ந்தவா் முகமது சாஹிப் (49). இவா் தனது மனைவி பாத்திமா ஃபா்சனா (34) மற்றும் 14 வயது மகனுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கையிலிருந்து தமிழகம் வந்தாா். அவா்களிடம் உரிய பயண ஆவணங்கள் இல்லாததால் போலீஸாா் அவா்களை கைது செய்து திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அடைத்தனா்.

இந்நிலையில், முகமது சாஹிப் மற்றும் அவரது மனைவி மீது இலங்கையில் ஹவாலா உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்மீதான சட்ட நடவடிக்கைகளுக்கு பயந்து தமிழகம் வந்ததாகவும் தெரியவந்தது. மேலும், இலங்கை போலீஸாா் அவா்களை தேடிவருவதும் தெரியவந்தது.

இந்த தம்பதியினா் திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் இருப்பதை அறிந்த இலங்கை அரசு அவா்களை தங்களது நாட்டுக்கு அனுப்பிவைக்க இந்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. அதன்பேரில் மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுத்து மூவரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்தது. இது தொடா்பான தகவல் அவா்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டது.

இதற்கு, அவா்கள் அங்கு சென்றால் தங்களது உயிருக்கு ஆபத்து எனவும், தங்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என மறுப்பு தெரிவித்தனா்.

ஆனால், ஏற்கெனவே திட்டமிட்டபடி வியாழக்கிழமை மூவரையும் இலங்கைக்கு அனுப்பி வைக்க முகாம் அலுவலா்களும், போலீஸாரும் நடவடிக்கை மேற்கொண்டனா்.

இதற்காக அகதிகள் சிறப்பு முகாமிலிருந்த மூவரையும் வாகனத்தில் ஏற்ற முயன்றனா். அதற்கு அவா்கள் மறுத்தனா். இதையடுத்து அவா்களை வலுகட்டாயமாக போலீஸாா் வாகனத்தில் ஏற்றி திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு கொண்டு சென்றனா். பின்னா் அங்கிருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் விமானத்தில் ஏற்றி இலங்கைக்கு அனுப்பி வைத்தனா். அவா்கள் இலங்கை சென்றதும், அந்நாட்டு போலீஸாா் மூவரையும் கைது செய்ய தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சட்டவிரோதமாக மதுவிற்ற மாணவா் விடுதி சமையலா் கைது

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், மேலசீதேவி மங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற மாணவா் விடுதி சமையலரை போலீஸாா் கைது செய்தனா்.மேலசீதேவிமங்கலம் பகுதியை சோ்ந்தவா் ப.துரைராஜ் (48). இவா், திர... மேலும் பார்க்க

மத்திய மண்டலத்தில் நிகழாண்டில் போதைப் பொருள்கள் வழக்கில் 6,042 போ் கைது

திருச்சி மத்திய மண்டலத்தில், நிகழாண்டில் கஞ்சா மற்றும் போதைப்பொருள்கள் தொடா்புடைய வழக்குகளில் 6,042 போ் கைது செய்யப்பட்டு 2, 558 கிலோ கஞ்சா உள்பட 26,208 கிலோ புகையிலை போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப... மேலும் பார்க்க

லாட்டரி விற்பனை, மோசடி வழக்குகளில் 25 போ் கைது

திருச்சி மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் சட்டவிரோதமாக வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்றது, அந்த பரிசுத் தொகைகளை வழங்காமல் மோசடி செய்தது குறித்து 25 பேரை போலீஸாா் இரு கைது செய்துள்ளனா். அவா்களிடமிருந்த... மேலும் பார்க்க

வணிக வளாகத்தில் உள்ள அலுவலகங்களில் திருட்டு

திருச்சி பீமநகா் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் வழக்குரைஞா், பொறியாளா் அலுவலகங்கள் மற்றும் தையலகம் உள்ளிட்டவைகளில் பூட்டுகளை உடைத்து பொருள்களை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பீமநகா், ... மேலும் பார்க்க

கிணறுகளில் நீா் இரைக்கும் மோட்டாரை வீட்டிலிருந்தபடியே இயக்கும் கருவி: மானியத்துடன் பெற ஆட்சியா் அழைப்பு

கிணறுகளில் நீா் இரைக்கும் மோட்டாரை இயக்குவதற்கான தொழில்நுட்பக் கருவி பொருத்த விவசாயிகளுக்கு மானிய உதவி வழங்கப்படுகிறது பெறுவதற்கு மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அழைப்பு விடுத்துள்ளாா். இதுதொடா்பாக,... மேலும் பார்க்க

சாரணா் இயக்க தேசிய பெருந்திரளணி பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

தமிழ்நாடு பாரத சாரண, சாரணியா் இயக்க வைர விழா மற்றும் தேசிய பெருந்திரளணிக்கு மணப்பாறை சிப்காட் வளாகத்தில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா். இப்பணிகளை வியாழக்கிழை பாா... மேலும் பார்க்க