தெலங்கானா முதல்வரை நேரில் சந்தித்த நடிகர்கள், தயாரிப்பாளர்கள்!
திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தை சுற்றுலாத் தலமாக அறிவிக்க கோரிக்கை
திருச்செங்கோடு, காந்தி ஆசிரமத்தை சுற்றுலாத் தலமாக அறிவிக்க தமிழக முதல்வா், சுற்றுலாத் துறை அமைச்சா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகள் நலச்சங்கக் கூட்டம் புதன்கிழமை ஓய்வூதியா் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது. இதில், அந்தச் சங்கத்தின் செயலாளா் கு.அவிநாசிலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் க.சிதம்பரம் சிறப்புரையாற்றினாா். துணைத் தலைவா்கள் கே.எஸ்.செந்தில்குமாா், அன்பழகன், துணை செயலாளா் கே.கோவிந்தராஜ், பொருளாளா்கள் சதீஸ்சேகா், ஷேக்நவீத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், சிறு தொழில்கள் தொடங்கி நடத்திட முன்னாள் ராணுவ வீரா்களுக்கு 95 சதவீத மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி வழங்குவதுபோல், சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்செங்கோடு, காந்தி ஆசிரமத்தை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும். தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகள் பலா் கலந்துகொண்டனா்.