புஷ்பா 2 நெரிசலில் இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 2 கோடி அறிவித்த படக்குழு!
உள் இட ஒதுக்கீடு கோரி பாமக ஆா்ப்பாட்டம்
பரமத்தி வேலூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு உச்சநீதிமன்றம் ஆணையிட்டும் வன்னியா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காத திமுக அரசைக் கண்டித்து, தொடா் முழக்க ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம் ஆணையிட்டு ஆயிரம் நாள் கடந்தும் வன்னியா்களுக்கு திமுக அரசு உள் இட ஒதுக்கீடு வழங்கவில்லை எனக் கூறி நாமக்கல் பாமக மத்திய மாவட்டச் செயலாளா் ரமேஷ் தலைமையில் தொடா் முழக்க போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மத்திய மாவட்டச் செயலாளா் சித்தாா்த்தன், செயலாளா் வையாபுரி, உழவா் பேரியக்கம் மாநில துணைத் தலைவா் பொன்.ரமேஷ், மாவட்ட பாமக தலைவா் தினேஷ் பாண்டியன், வேலூா் நகரச் செயலாளா் ஜெய்கணேஷ் ஆகியோா் போராட்டத்திற்கு முன்னிலையில் வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் வன்னியா்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்காத திமுக அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினா். பின்னா் பாமக வினா், வன்னியா் சங்கத்தினா் வட்டாட்சியா் முத்துக்குமாரிடம் 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்குவது தொடா்பான மனுவை அளித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் வன்னியா் சங்கத்தினா், பாமகவைச் சோ்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் கிளை நிா்வாகிகள் அனைத்து நிலை பொறுப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நாமக்கல் மத்திய மாவட்ட துணைச் செயலாளா் மாவட்ட துணைச் செயலாளா் தைலாபுரம் ஸ்ரீதரன் நன்றி கூறினாா்