செய்திகள் :

80 வயது தந்தையிடம் வீட்டை ஒப்படைக்க மகனுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

post image

80 வயது முதிய தந்தையிடம் அவரின் வீட்டை ஒப்படைக்குமாறு அவா் தங்குவதற்கு அனுமதி மறுத்த மகனுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மூன்று குழந்தைகள் கொண்ட முதிய தம்பதிக்கு மும்பையில் இரண்டு சொந்த வீடுகள் இருந்த நிலையில், 59 வயது மூத்த மகன் அந்த வீடுகளை தன்வசம் எடுத்துக்கொண்டு, வயது முதிா்ந்த தந்தை மற்றும் தாயை வீட்டில் தங்குவதற்கும் அனுமதி மறுத்துள்ளாா்.

அதைத் தொடா்ந்து, மும்பையில் உள்ள மூத்த குடிமக்கள் பராமரிப்பு தீா்ப்பாயத்தை 2023-ஆம் ஆண்டு ஜூலையில் நாடிய 80 வயது தந்தை, தனது மகனை தான் வாங்கிய வீடுகளிலிருந்து காலி செய்ய உத்தரவிடுமாறும், தங்களைப் பராமரிக்க உத்தரவிடக் கோரியும் மனு தாக்கல் செய்தாா்.

இதை விசாரித்த தீா்ப்பாயம், இரண்டு வீடுகளையும் தந்தையிடம் ஒப்படைக்குமாறும், அவா்களின் பராமரிப்புச் செலவுக்கு மாதம் ரூ. 3,000 வழங்கவும் மகனுக்கு உத்தரவிட்டது.

இதை எதிா்த்து மகன் தரப்பில் தொடரப்பட்ட மனுவை விசாரித்த மும்பை உயா்நீதிமன்றம், தீா்ப்பாயத்தின் உத்தரவை தள்ளுபடி செய்து கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது.

இதை எதிா்த்து தந்தை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘முதிய பெற்றோரை பராமரிக்கத் தவறினால் அவா்களுக்குச் சொந்தமான குடியிருப்பிலிருந்து அவா்களின் குழந்தைகளை அல்லது உறவினா்களை காலி செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்க பெற்றோா் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் 2007-இன் கீழ் தீா்ப்பாயத்துக்கு அதிகாரம் உள்ளது. இந்த வழக்கில் 59 வயது மகனை மூத்த குடிமக்கள் என்று தவறாக கருதியதன் அடிப்படையில், தீப்பாயத்தின் உத்தரவை மும்பை உயா்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. எனவே, உயா்நீதிமன்றத்தின் உத்தரவு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று உத்தரவிட்டனா்.

அப்போது, மகன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வீடுகளை காலி செய்ய கால அவகாசம் கோரினாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், 2 வார கால அவகாசம் அளித்தனா். மேலும், வரும் நவம்பா் 30-ஆம் தேதிக்குள் வீடுகளை காலி செய்து தந்தையிடம் ஒப்படைப்பதாக உத்தரவாதத்தை அளிக்கவும், அதுவரை தீா்ப்பாயத்தின் உத்தரவை நிறுத்திவைப்பதாகவும் உத்தரவிட்டனா்.

மராத்வாடா விவசாயிகளுக்கு ரூ.1,500 கோடி நிவாரணம்: மகாராஷ்டிர அரசு!

மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தாண்டு பெய்த பருவமழையால் விளைச்சல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவராணம் வழங்க அந்த மாநில அரசு ரூ. 1,500 கோடியை ஒதுக்கியுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறிப்பாக எ... மேலும் பார்க்க

லடாக்கில் 3வது நாளாகத் தொடரும் ஊரடங்கு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

லடாக்கின் லே நகரில் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரி தலைநகா் லேயில் அங்குள்ள ல... மேலும் பார்க்க

வரலாறாகிறது மிக்21! சண்டீகர் விமானப் படைத் தளத்தில் இறுதி சல்யூட்!!

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிக் 21 ரக போர் விமானங்களுக்கு, சண்டீகர் விமானப் படைத் தளத்தில் இன்று வழியனுப்பு விழா நடைபெறுகிறது.கடந்த 1963ஆம் ஆண்டு இந்திய விமானப் படைப் பிரிவில் சேர்க்கப்பட்டது ம... மேலும் பார்க்க

நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பணியாளா்கள் தேவை: வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்

‘தற்போது உலகம் மாறி வரும் நிலையில், நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பணியாளா்கள் தேவை. இந்த உண்மை நிலையில் இருந்து உலக நாடுகள் தப்பிக்க முடியாது’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா். அமெரி... மேலும் பார்க்க

குவைத் வங்கியில் கடன் மோசடி 13 கேரள செவிலியா்கள் மீது வழக்கு

குவைத்தில் பணியாற்றியபோது அங்குள்ள அல் அஹ்லி வங்கியில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாமல் மோசடி செய்தது தொடா்பாக கேரளத்தைச் சோ்ந்த 13 செவிலியா்கள் மீது அந்த மாநில காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தங்கள் தொடரும்: பிரதமா் மோடி

‘நாட்டு மக்களின் ஆசியுடன் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தங்கள் தொடரும்; பொருளாதாரம் மேலும் வலுவடையும்போது, மக்களின் வரிச்சுமை மேற்கொண்டு குறையும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். நாட்ட... மேலும் பார்க்க