செய்திகள் :

821 நூலகங்களுக்கு புதிய கட்டடங்கள்: அமைச்சா் அன்பில் மகேஸ் தகவல்

post image

தமிழ்நாடு முழுவதும் 821 நூலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது, பாபநாசம் தொகுதியில் கிளை நூலகத்துக்கு கட்டடம் கட்ட வேண்டும் என்று அந்தத் தொகுதியின் உறுப்பினா் எம்.எச்.ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி) கோரிக்கை விடுத்தாா். இதற்கு அமைச்சா் அன்பில் மகேஸ் அளித்த பதில்:

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 821 நூலகங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு 29 மைய நூலகங்கள், 68 முழுநேர கிளை நூலகங்களை ரூ. 27.06 கோடியில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைவருக்கும் கல்வி திட்டத்தின் (எஸ்எஸ்ஏ) மூலமாக புத்தகங்களைக் கொள்முதல் செய்து வருகிறோம். வெளிப்படைத் தன்மையான முறையில் புத்தகங்களை ஆன்லைன் வழியாக கொள்முதல் செய்து வருகிறோம். தேவைக்கு ஏற்ப புத்தகங்களை கொள்முதல் செய்து வழங்குவோம் என்று தெரிவித்தாா்.

டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டணங்கள்: யுபிஐ மூலம் செலுத்தும் வசதி அறிமுகம்!

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கட்டணங்களை யுபிஐ(UPI) மூலம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பதிவுக்கான கட்டணம், தேர்வுக் கட்டணங்களை யுபிஐ மூலம் இனி செலுத்தலாம்.2025-ம் ஆண்டு ஜனவரி முதல் ம... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தங்க மணி!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் ’தங்கத்தால் செய்யப்பட்ட மணி’ கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்... மேலும் பார்க்க

பிரதமர் இலங்கைக்கு செல்வதாலேயே கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றம்: ரகுபதி

பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்ல விருப்பதாலேயே கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி ... மேலும் பார்க்க

மத சுதந்திரத்துக்கும் அரசியல் சாசனத்துக்கும் எதிரானது வக்ஃப் மசோதா: ஆ. ராசா

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவானது மத சுதந்திரத்துக்கும் அரசியல் சாசனத்துக்கும் எதிராக இருப்பதாக திமுக எம்பி ஆ. ராசா தெரிவித்தார்.மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் விவகாரத... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டம்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

1995ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தில் உத்தேச திருத்தம் செய்யும் சட்ட முன்வடிவினை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப். 2) கடிதம் எழுதிய... மேலும் பார்க்க