செய்திகள் :

Actor Rajesh: உடல்நலக் குறைவால் காலமானார் நடிகர் ராஜேஷ்

post image

தமிழ் சினிமாவின் முன்னணி கதாப்பாத்திரங்களிலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் கேரக்டர் ரோல்களும் செய்து குணச்சித்திர நடிகராக தன்னை பதிவு செய்துக் கொண்ட நடிகர் ராஜேஷ் காலமானார்.

150-க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்திருக்கிறார். சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்த இவர் தமிழ், மலையாளம் என இருமொழிகளிலும் திரைப்படங்கள், சீரயல்களில் நடித்திருக்கிறார். 1974-ம் ஆண்டு கே. பாலசந்தரின் 'அவள் ஒரு தொடர்கதை' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், 'கன்னி பருவத்திலே', 'அச்சமில்லை அச்சமில்லை' ஆகிய திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

Actor Rajesh
Actor Rajesh

இதை தாண்டி தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களின் படங்களில் கேரக்டர் ரோல்களும் செய்து குணச்சித்திர நடிகராக தன்னை பதிவு செய்துக் கொண்டார்.

ஜோதிடத்தில் ஆர்வம் கொண்ட இவர் பல ஜோதிடர்களையும் சமீப நாட்களில் ஒரு யூட்யூப் சேனலுக்காக நேர்காணல் செய்து வந்தார். 1987 முதல் 1991 வரை அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் நடிகர் ராஜேஷ். தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியின் தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொறுப்பு வகித்திருந்தார்.

Actor Rajesh
Actor Rajesh

இன்று காலை உடல்நலக் குறைவால் இயற்கை எய்தியிருக்கிறார். இவருக்கு வயது 76. அவரின் உடல் அவருடைய ராமப்புரம் இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. சினிமா பிரபலங்கள் பலரும் நடிகர் ராஜேஷின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Saregamapa: "சிவகார்த்திகேயன் சார் ஏன் அழுதார்னு தெரில!" - 'சரிகமப' மஹதி பேட்டி

'சரிகமப' லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4 நிறைவடைந்திருக்கிறது. திவினேஷ் டைட்டில் வின்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இவரைத் தாண்டி பைனல்ஸுக்கு மொத்தமாக 6 போட்டியாளர்கள் வந்திருந்தனர். இந்த 6 நபர்களில் ... மேலும் பார்க்க

What to watch on OTT: 'ரெட்ரோ', 'துடரும்' - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

இந்த வார ஓடிடி வெளியீடுகளின் பட்டியல்INTERROGATION (HINDI)கொலை செய்யப்படும் நீதிபதியும், கொலையின் காரணத்திற்கான விசாரணையும் என விரைகிறது இந்த 'இன்டரோகேஷன்'.INTERROGATION (HINDI)நடிகர்கள் தர்ஷன் ஜரிவால... மேலும் பார்க்க

Rajinikanth: "நீங்க நீண்ட நாள் வாழணும்னு சொல்லுவார்" - நடிகர் ராஜேஷ் குறித்து ரஜினிகாந்த் உருக்கம்

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களுள் ஒருவர் நடிகர் ராஜேஷ். 150க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், சின்னத்திரை தொடர்களில் நடித்திருக்கிறார். நடிப்பதைத் தாண்டி ஜோதிடத்திலும் ஆர்வம் கொண்ட இவர் மே 29 ஆம் தேதி உட... மேலும் பார்க்க

The Verdict Review: மிரட்டல் வரலட்சுமி, எமோஷனல் ஸ்ருதி; பரபர கோர்ட் ரூம் டிராமா வெல்கிறதா?

அமெரிக்காவில் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களுக்குச் சொந்தக்காரரான எலிசாவை (சுஹாசினி) கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறார் நம்ருதா (ஸ்ருதி ஹரிஹரன்). கணவரை இழந்து தனிமையில் வாழ்ந்து வரும் எலிசா, நம்ர... மேலும் பார்க்க