சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழ் வந்தது என்றால் ஏற்றுக்கொள்வோமா? -சி.பி.ராதாகிருஷ்...
What to watch on OTT: 'ரெட்ரோ', 'துடரும்' - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
இந்த வார ஓடிடி வெளியீடுகளின் பட்டியல்
INTERROGATION (HINDI)
கொலை செய்யப்படும் நீதிபதியும், கொலையின் காரணத்திற்கான விசாரணையும் என விரைகிறது இந்த 'இன்டரோகேஷன்'.

நடிகர்கள் தர்ஷன் ஜரிவாலா , அபிமன்யூ சிங் , யஷ்பால் ஷர்மா ,ராஜ்பல் யாதவ் நடித்துள்ள இத்திரைப்படம் மே 30-ம் தேதி ஜீ 5 தளத்தில் வெளியாகியுள்ளது .
தியேட்டர் டூ ஓடிடி
ரெட்ரோ - நெட் ஃப்ளிக்ஸ்
நடிகர் சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த மே 1-ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் ரெட்ரோ. வெளியான முதல் நாள் முதலே கலவையான விமர்சனங்கள் பெற்ற இத்திரைப்படம் 30 நாட்களுக்கு பிறகு மே 31-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

நிழற்குடை - ஆஹா
நடிகை தேவயானி நடிப்பில் கடந்த மே 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் மே 30-ம் தேதி ஆஹா தளத்தில் வெளியாகியுள்ளது.
SIKANDAR (HINDI)-NETFLIX
இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் பாலிவுட் நடிகர் சல்மான்கான் கூட்டணியில் மார்ச் 30-ம் தேதி வெளியான திரைப்படம் சிக்கந்தர் . மிகவும் சுமாரான வரவேற்பையே பெற்ற இத்திரைப்படம் பல நாட்களுக்கு பிறகு கடந்த மே 25-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது.
AGNYATHAVASI (KANNADA)- ZEE 5
கடந்த ஏப்ரல் 11-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற இந்த சஸ்பென்ஸ் திரைப்படம் தற்போது ஜீ5 தளத்தில் மே 28-ம் தேதி வெளியாகியுள்ளது.
HIT 3 (TELUGU)- NETFLIX
போலீஸ் விசாரணை கதைகளில் வெற்றி கண்ட ஹிட் வரிசைப் படங்களின் மூன்றாவது பாகமான இத்திரைப்படத்தில் தெலுங்கின் நேச்சுரல் ஸ்டாரான நானி நடித்துள்ளார். மே 1-ம் தேதி வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது, கடந்த மே 29-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது.

THUDARUM (MALAYALAM)- JIO HOTSTAR
மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு பெற்று நல்ல வசூலும் பார்த்த இத்திரைப்படம் , மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தற்போது மே 30-ம் தேதி ஜியோ ஹாட் ஸ்டார்ட் தளத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் டப்பிங்கிலும் வெளியாகியுள்ளது.
CAPTAIN AMERICA: BRAVE NEW WORLD (ENGLISH)-JIO HOTSTAR
மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற இத்திரைப்படம், கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு பிறகு மே 28-ம் தேதி ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது.

ஓடிடி தொடர்கள்
வானில் தேடினேன் AHA - மே 30
Katha Sudha : Naathi Charaamani (Telugu) etv WIN - மே 25
Criminal Justice: A Family Matter (Hindi ) Jio Hotstar - மே 29
Kankhajura (Hindi) SonyLIV - மே 30
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...