செய்திகள் :

Amaran: குடிச்சிட்டு ரகளை பண்ணினேனா? `அமரன்' படத்தில் `சீன்' கட் ஆனது குறித்து ஶ்ரீகுமார்

post image

சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற 'அமரன்' படத்தில் சீரியல் நடிகர் ஶ்ரீ குமாரும் நடித்திருந்தார். ஆனால் இவர் நடித்த பெரும்பாலான காட்சிகள் எடிட்டிங்கில் கட் செய்யப்பட்டு விட்டதால், அவரைத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே படத்தில் அவர் இருப்பது தெரிந்தது. இந்நிலையில் 'அமரன்' ஆடிஷனுக்காகத் தான் ஷூட் செய்திருந்த வீடியோவை தற்போது வெளியிட்டிருக்கிறார் ஶ்ரீ.

ஶ்ரீ குமார்

படத்தில் காட்சிகள் எடிட்டிங்கில் போனது குறித்து கவலை இல்லையா' என்ற கேள்வியுடன் அவரைச் சந்தித்தோம்.

''சினிமாவுல இந்த மாதிரி சம்பவங்கள் பொதுவா நடக்கிறதுதான். எடிட்டிங் அப்படின்னு ஒரு விஷயம் இருந்தா மட்டும் தான் நல்ல சினிமாக்கள் நமக்குக் கிடைக்கும். அதனால என் காட்சிகள் எடிட்டிங்கில் போயிடுச்சுனு வருத்தப்படறதோ, அதிருப்தியாகறதோ அவசியமில்லாதது ன்னு  நினைக்கிறேன். 'அமரன்' படத்தைப் பொறுத்தவரை எல்லா குரூப் ஆடியன்ஸ்கிட்ட இருந்தும் பாசிடிவான ரெஸ்பான்ஸ் கிடைச்சிட்டிருக்கு. நல்ல வரவேற்பைப் பெற்ற ஒரு படத்தில் நானும் இருக்கேன் னு நினைக்கறப்ப எனக்கு திருப்தியா தான் இருக்கு.

இன்னொரு விஷயத்தையும் சொல்ல விரும்பறேன். ஆர்ட்டிஸ்டுகள் கிட்ட 'படத்துல நீங்க கூட்டத்துல ஒருத்தரா தான் வர்றீங்களா', 'ஹீரோவுக்கு பின்னாடி நிக்கிற கேங்கா'ன்னெல்லாம் சிலர் கேக்குறாங்க. பலரையும் காயப்படுத்தற இந்த மாதிரியான கேள்விகளை தயவு செய்தும் யாருகிட்டயும் கேக்காதீங்க. எடுத்த எடுப்பிலேயே ஹீரோவாகி சக்ஸஸ் தருவதெல்லாம் எங்காவது எப்போதாவது அரிதாக நடக்கிற விஷயம். யாராவது ஒரு சிலருக்கு தான் அப்படிப்பட்ட  அதிசயம் நிகழும். மத்தபடி நிறையப் பேர் கூட்டத்துல ஒருத்தரா நின்னு முட்டி மோதி தான் சினிமாவுக்குள்ள வர்றாங்க. என்னைப் பொறுத்தவரை சீரியலுக்கு வர்றப்பவே நேரடியா ஹீரோவா வந்துடலை. அங்கயே பல சீரியல்களில் கேரக்டர்களில் நடிச்சுதான் அதாவது ஹீரோ ஹீரோயினுக்குப் பின்னாடி நின்னு நடிச்சுதான் படிப்படியே முன்னேறி அதுக்குப் பிறகுதான் ஹீரோவா வந்தேன்.

அமரன் திரைப்பட புகைப்படம்

அதனால சினிமாவுல இந்த மாதிரி கூட்டத்துல, ஹீரோக்களுக்குப் பின்னாடி வர்றதுங்கிறதை ஒரு நாள் முன்னாடி வர்றதுக்கான பாதையாகத்தான் பார்க்கிறேன். இந்த இடத்துல நடிகர் விஜய் சேதுபதிகிட்ட இருந்து நாம கத்துக்கலாம். நான் அவரை சில விஷயங்கள்ல ஃபாலோ செய்யறேன். அவர் ஆரம்பத்துல சீரியல்ல நடிச்சார். பிறகு சில படங்கள்ல ஹீரோக்களுக்குப் பின் வரிசையில நின்னு நடிச்சார்.  அப்பெல்லாம் அவர் கேஷவலா எடுத்துகிட்டு எந்தவொரு தயக்கமும் இல்லாம நடிச்சதாலதான் இன்னைக்கு ஒரு உயரத்துக்கு அவரால் வர முடிஞ்சிருக்கு'' என்றவரிடம் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ குறித்தும் கேட்டோம். 

'அமரன்' படத்துல நடிக்க வாய்ப்பு வந்தப்ப ஹிந்தி தெரியுமானு கேட்டாங்க. எனக்கு ஹிந்தி சரளமா தெரியும்கிறதால டயலாக் பேச ரெடியா இருந்தேன். 'சரி, நீங்களே ஷூட் செய்து ஆடிஷனுக்கு வீடியோ அனுப்பி வைங்கன்னு சொல்லிக் கேட்டாங்க. அப்ப நான் 'வானத்தைப் போல' சீரியலின் ஷூட்டிங்கில் பாண்டிச்சேரியில் இருந்தேன்.

அமரன்

சீரியல் ஷூட் முடிஞ்சதும் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்ததும், எல்லாரும் தூங்கின பிறகு மிலிட்டரி காஸ்ட்யூம் போட்டுகிட்டு கையில துப்பாக்கி வச்சிருக்கிற மாதிரியான ஆக்டிங்கோட ஒரு ஷூட் செய்தேன். சீரியல் ஷூட்டிங்கில் என்னுடன் இருந்தவங்களுக்கு நான் படத்துக்காக ஆடிஷன் வீடியோ எடுக்கறேன்கிற விஷயம் தெரியாது.

அதேபோல ஹோட்டல் ஊழியர்களும் கேமராவுல என்னைப் பார்த்துட்டு என்னமோ ஏதோன்னு பதறிப் போயிட்டாங்க. ஒருகட்டத்துல ஷூட்டிங் முடிஞ்சதும் குடிச்சிட்டுப் போய் மத்த ரூம் கதவைத் தட்டிட்டிருக்காருங்கிற முடிவுக்கே வந்துட்டாங்க. அப்புறம் ஒரு வழியா விஷயத்தைச் சொல்லிப் புரிய வச்சேன்'' என்றார் ஶ்ரீ.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

`நடித்தது ஒரே படம் ஆனால் அதன் தாக்கம்!' -சத்யஜித் ரேவின் முதல் குழந்தை நட்சத்திரம் துர்கா காலமானார்!

இயக்குநர் சத்யஜித் ரேவின் முதல் குழந்தை நட்சத்திரமான உமா தஷ்குப்தா இயற்கை எய்தியிருக்கிறார்.வங்க மொழி இயக்குநரான சத்யஜித் ரேவின் முதல் திரைப்படமான `பதர் பாஞ்சாலி' 1955-ல் வெளியானது. இன்றும் கொண்டாடப்ப... மேலும் பார்க்க

காலமானார் 'அன்னக்கிளி' வயலினிஸ்ட் ராமசுப்பு!

இசைஞானி இளையராஜாவுடன் சுமார் 30 ஆண்டுகளுக்கும்மேல்வயலினிஸ்டாகஇருந்த ராமசுப்பு என்ற ராமசுப்ரமணியன் நேற்று முன்தினம் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91.ஒன்பதாவது வயதில் தன்னுடைய அப்பா கே.எஸ், நாராயண... மேலும் பார்க்க

``அந்த ஷோவுல அவர் ஸ்கிரிப்ட் எல்லாருக்கும் பிடிச்சது...'' - எம்.ஜி.கன்னியப்பன் குறித்து கதிர்பாரதி

பத்திரிகையாளர், எழுத்தாளர், திரைப்படப் பாடலாசிரியர் எனப் பல முகங்களைக் கொண்ட எம்.ஜி.கன்னியப்பன் திடீர் மாரடைப்பால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த அவருடைய நண்பர்கள் பலரும் இரங்கல... மேலும் பார்க்க