செய்திகள் :

Arjun: 13 வருட காதல்; `பெற்றோர் சம்மதத்துடன் நடந்த நிச்சயதார்த்தம்' - அர்ஜுன் மகள் பதிவு

post image

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அர்ஜுன். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இவர் 90-களில் முன்னணி ஆக்ஷன் ஹீரோ. இப்போது வில்லனாக, குணச்சித்திர நடிகராக எனப் பல முக்கியக் கதாப்பத்திரங்களில் நடித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநரும் நடிகருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் கடந்த வருடம் விமரிசையாக திருமணம் நடந்தது. இளைய மகள் அஞ்சனாவுக்கு சினிமாவின் மீது துளியும் ஆர்வம் இலை. ஒரு தொழிலதிபராக மாற வேண்டும் என்பதே அவரின் ஆசை. எனவே கடந்த 2023-ம் ஆண்டு 'ஹேண்ட் பேக்' தாயாரிக்கும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார்.

இந்த நிலையில், மொத்த குடும்பமும் இத்தாலியில் இருக்கும்போது, ``கடந்த 13 வருடங்களாக காதலித்து வந்த காதலரின், திருமண புரபோசலை ஏற்றுக் கொண்டேன்' எனக் கூறி, அவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து, அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனாவுக்கும் கூடிய விரைவில் திருமணம் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஞ்சனாவின் காதலர் யார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் இப்போது வரை வெளியாகவில்லை.

Bobby Simha: சென்னையில் கார் விபத்து; 6 வாகனங்கள் சேதம்; போதையில் இருந்த ஓட்டுநர் கைது!

தேசிய விருது பெற்ற நடிகரான பாபி சிம்ஹாவின் கார் சென்னை கிண்டியில் உள்ள கத்திப்பாரா மேம்பாலத்தில் விபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விபத்தில் 6க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும், பெண் உள்... மேலும் பார்க்க

Bombay: `பாம்பே படம் இன்று வெளியானால்... நாட்டின் சகிப்புத்தன்மை?’ - ராஜீவ் மேனன் ஓப்பன் டாக்

மணிரத்னத்தின் 'பாம்பே' படம் இன்று திரையரங்குகளில் வெளியானால் பெரும் சவால்களை சந்திக்கும். அந்தளவு இந்தியா சகிப்புத் தன்மையில்லாத நாடாக மாறிவருகிறது என பாம்பே படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் தெரிவி... மேலும் பார்க்க

XEV 9E: "இந்த காருக்கான சவுண்டை நாங்கள் உருவாக்கினோம்" - ரஹ்மானின் இன்ஸ்டா பதிவு வைரலாக காரணம் என்ன?

மஹிந்திரா நிறுவனம் தனது புதிய EV-BE6, XEV 9E கார்களை அறிமுகப்படுத்தியது. இந்த BE6 மற்றும் XEV 9E-யின் ஒலி வடிவமைப்பில் ஆஸ்கர் நாயகன் AR ரஹ்மானும் பணியாற்றியிருக்கிறார். இது தொடர்பாக அவர் முன்பு வெளியி... மேலும் பார்க்க

Thug Life: "நான் ராமர் இல்ல; ராமரின் அப்பா வகையறா" - திருமணம் குறித்த கேள்விக்குக் கமல் ஹாசன் பதில்

கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியின் 'தக் லைஃப்' ரிலீஸ் வருகிற ஜூன் 5ம் தேதி என அறிவிக்கப்பட்டிருப்பதால் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. 'நாயகன்' படத்திற்குப் பின் 36 ஆண்ட... மேலும் பார்க்க