செய்திகள் :

Basics of Share Market 18 : 'Lumpsum', 'SIP' என்றால் என்ன?!

post image
லம்ப்சம், எஸ்.ஐ.பி - இந்த இரண்டு வார்த்தைகளை கேட்கும்போது, ஏதோ பெரிய விஷயம் என்று நாம் நினைக்கலாம். அப்படியெல்லாம் இல்லை. எளிதாக கூறவேண்டுமானால், இரண்டுமே இரண்டு விதமான முதலீட்டு முறை. அவ்வளவு தான்.

எஸ்.ஐ.பி என்றால் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதாகும். மாதம் எத்தனை ரூபாயை முதலீடு செய்ய முடியும் என்று முடிவு செய்து, நீண்ட காலத்தில் எந்தப் பங்கின் போக்கு லாபமாக இருக்கும் என்பதை கணித்து மாதா மாதம் அதே பங்கில் முதலீடு செய்வது ஆகும்.

இன்னும் தெளிவாக பார்க்கலாம்...

இன்னும் தெளிவாக பார்க்கலாம்... ராஜின் துணிக்கடையின் பங்கு மதிப்பு 10 ஆண்டுகளில் பல மடங்கு உயரும் என்பதை கணித்திருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், மாதா மாதம் முதலீட்டிற்கு ரூ.500 தான் ஒதுக்க முடியும். இந்த நிலையில், மாதா மாதம் ரூ.500-ஐ ராஜின் துணிக்கடை பங்கில் 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்வது எஸ்.ஐ.பி ஆகும்.

ஒரு வருடம் கழித்து, வருமானம் உயர்கிறது. இப்போது ரூ.1,000 முதலீடு செய்யலாம் என்றால் ரூ.500 எஸ்.ஐ.பி தொகையை உயர்த்தி ரூ.1,000 ஆக முதலீடு செய்வது ஸ்டெப் அப் எஸ்.ஐ.பி. நமது வருமானம் உயர உயர முதலீட்டு தொகையையும் அதிகரிப்பது ஸ்டெப் அப் எஸ்.ஐ.பி.

நிலம் விற்றோ, வர வேண்டிய தொகை வந்தோ - இப்படி ஒரு 'பல்க்'கான தொகை கையில் கிடைக்கிறது. இதை முதலீடு செய்து நல்ல வட்டியுடன் லாபம் பார்க்க வேண்டுமானால், பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம். இப்படி மிகப்பெரிய தொகையை முதலீடு செய்வது தான் லம்ப்சம்.

திங்கட்கிழமை: போர்ட்ஃபோலியோ என்றால் என்ன...எப்படி கட்டமைக்க வேண்டும்?!

Basics of Share Market 34: பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கங்களை சமாளிப்பது எப்படி?

பங்குச்சந்தை ஏற்ற, இறக்கங்கள் வரும்போது நமக்குக் கலவையான மனநிலை இருக்கும். பங்கு விலை உயர்ந்தால், 'இன்னும் அதிகம் முதலீடு செய்து லாபம் பார்க்கலாம்' என்றும், பங்கு விலை குறைந்தால், 'இன்னும் கீழே இறங்கி... மேலும் பார்க்க

Adani: அதானி மீதான குற்றச்சாட்டு; 20% வீழ்ந்த அதானி குழுமம்; எந்தெந்த பங்குகள் எவ்வளவு வீழ்ச்சி?

கௌதம் அதானி உள்ளிட்ட எட்டு பேர் மீது அமெரிக்காவின் லஞ்சம் மற்றும் மோசடி குற்றச்சாட்டால் அதானி குழுமத்தின் பங்கு 20 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.'அடுத்து 20 ஆண்டுகளில் 2 பில்லியன் டாலர் லாபம் கிடைக்... மேலும் பார்க்க

Basics of Share Market 33: `எங்கும்... எதிலும்... இங்கேயும் ஸ்கேம்' - பங்குச்சந்தை மோசடிகள் உஷார்

டிஜிட்டல்களில் பங்குச்சந்தை... ஆன்லைனில் பங்குகள் வாங்கலாம்... விற்கலாம் என்கிற போதே 'ஸ்கேம்' என்ற ஒன்று வந்துவிடுகிறது. முன்பு, ஸ்கேம்கள் இல்லை என்று கூறவில்லை. ஆனால், தற்போது ஆன்லைனில் ஸ்கேம்கள் பெர... மேலும் பார்க்க

Basics of Share Market 32: பங்குச்சந்தையில் `இது' ஆபத்து; `இதை' பண்ணாதீங்க!

'களத்தில் இறங்குவது' என முடிவு செய்துவிட்டோம் என்று கையில் இருக்கும் அத்தனை காசையும் பங்குச்சந்தையில் கொட்டிவிடக்கூடாது. என்ன தான் பங்குச்சந்தையில் லாபங்கள் குவிந்தாலும், அதில் ரிஸ்க் அதிகம் என்பதை எப... மேலும் பார்க்க