Cancer-க்கு பலியான அம்மா; மாடியில் இயற்கை விவசாயம் செய்யும் மகன்! | SUDAGAR KRISHNAN GARDEN
சென்னை ஆவடியில் வசிக்கும் சுதாகர் கிருஷ்ணன் மத்திய அரசு ஊழியர். கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த இவர், அடிப்படையில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். கேன்சருக்கு தன் அம்மாவைப் பறிகொடுத்த சுதாகர் கிருஷ்ணன், நஞ்சில்லா உணவுதான் நோயில்லா வாழ்வுக்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்து இயற்கை விவசாயத்தைக் கையில் எடுத்தார். பணி நிமித்தமாகச் சென்னையில் வசித்தாலும் மாடியில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.