செய்திகள் :

Captain Prabhakaran: ``துப்பாக்கி படத்தின் அந்தக் காட்சிக்கு காரணம் இந்தப் படம்தான்!'' - முருகதாஸ்

post image

விஜயகாந்தின் 100-வது திரைப்படமான 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் ஆகஸ்ட் 22-ம் தேதி ரீ ரிலீஸாகிறது. படத்தின் மறு வெளியீட்டையொட்டி நேற்று சென்னை கமலா திரையரங்கில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.

Captain Prabhakaran
Captain Prabhakaran

படக்குழுவினர் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு விஜயகாந்த் உடனான நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார்கள்.

முருகதாஸ் பேசுகையில், " 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் என் வாழ்க்கையில் மிக நெருக்கமான திரைப்படம்.

கள்ளக்குறிச்சியில் இந்த திரைப்படம் 100 நாள்கள் ஓடியது. தொடர்ந்து 10 நாள்கள் நான் தினமும் திரையரங்கிற்குச் சென்று படத்தைப் பார்த்தேன்.

'கேப்டன் பிரபாகரன்' படத்தின் திரைக்கதை எனக்குப் பல விஷயங்களை சொல்லிக் கொடுத்திருக்கிறது. இந்தப் படத்தின் 19 நிமிடத்திற்குப் பிறகுதான் விஜயகாந்த் சார் வருவார்.

அது என்னை மிகவும் ஈர்த்தது. இதன் இன்ஸ்பிரேஷன் என்னுடைய ஒவ்வொரு படத்திலும் தொடர்ந்திருக்கும்.

AR Murugadoss
AR Murugadoss

'துப்பாக்கி' படத்தில் பஸ் பிளாஸ்ட் காட்சியில் கதை தொடங்கிவிடும். அதற்கு இன்ஸ்பிரேஷனும் இத்திரைப்படம்தான். ஒரு படத்தில் வில்லன் இறந்தப் பிறகு படத்தில் கதை இருக்காது.

ஆனால், இப்படத்தில் இருக்கும். அதுதான் எனக்கு 'ரமணா' படத்திற்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது. விஜயகாந்த் சாரை வைத்து படம் எடுப்பது எனக்கு கனவு. அது நடந்தது.

அதுபோல, அவர்தான் எனக்கு திருமணத்தை நடத்தி வைத்தார். இப்படத்தை ரசிகனாக பார்த்து இன்று அப்படத்தின் ரீ ரிலீஸ் நிகழ்வில் அதே இயக்குநருடன் அமர்ந்திருப்பது எனக்கு கனவு போல இருக்கிறது. " எனப் பேசியிருக்கிறார்.

Captain Prabhakaran: ``இந்தப் படத்தில் நடிக்க வேண்டிய ஹீரோயின் இவங்க தான்!'' - மன்சூர் அலி கான்

மறைந்த நடிகர் மற்றும் அரசியல் தலைவருமான விஜயகாந்தின் 100-வது திரைப்படம், 'கேப்டன் பிரபாகரன்'. இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை கமலா திரை... மேலும் பார்க்க

Captain Prabhakaran: ``அப்பாவை நினைத்து அழுவது கோழைத்தனம் கிடையாது!'' - கண் கலங்கிய விஜய பிரபாகரன்

விஜயகாந்தின் 100-வது திரைப்படமான 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் ஆகஸ்ட் 22-ம் தேதி ரீ ரிலீஸாகிறது. படத்தின் மறு வெளியீட்டையொட்டி நேற்று சென்னை கமலா திரையரங்கில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. பட... மேலும் பார்க்க

Captain Prabhakaran: ``தமிழில் எனக்கு வெற்றி கிடைக்காதபோது இப்படம் செய்த விஷயம்'' - ரம்யா கிருஷ்ணன்

விஜயகாந்தின் 100-வது திரைப்படமான 'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் ஆகஸ்ட் 22-ம் தேதி ரீ ரிலீஸாகிறது. படத்தின் மறு வெளியீட்டையொட்டி நேற்று சென்னை கமலா திரையரங்கில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.Cap... மேலும் பார்க்க

What to watch - Theatre & OTT: பறந்து போ, மாமன், Jurassic World Rebirth - இந்த வார ரிலீஸ் லிஸ்ட்

இந்த வார தியேட்டர் ரிலீஸ் ராகு - கேது (தமிழ்)துரை பாலசுந்தரம் இயக்கத்தில் சமுத்திரக்கனி, அர்ச்சனா, சந்தியா, ஆனந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ராகு கேது'. ஜோதிடத்தை மையமாகக் கொண்டு ... மேலும் பார்க்க

"நான் நடிக்காத கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்!" - பகிர்கிறார் ஆஷிஷ் வித்யார்த்தி

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி என அனைத்துப் பக்கங்களிலும் ஆல் ரவுண்டராக வலம் வந்தவர் நடிகர் ஆஷிஷ் வித்யார்தி.வில்லன், குணச்சித்திர வேடங்கள் எனத் தமிழ் சினிமாவில் பல பரிமாணங்களில் ... மேலும் பார்க்க