செய்திகள் :

CJI கவாய் மீது தாக்குதல்: "சனாதனவெறியர்களின் கொட்டம் தலைவிரித்தாடுகிறது" - திருமாவளவன் கண்டனம்

post image

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீசிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கிட்டத்தட்ட அனைத்து மாநில மற்றும் தேசிய கட்சிகளும் தலைவர்களும் நீதிபதி மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நீதிபதி கவாய்

அந்தவகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், "உச்சநீதிமன்ற வளாகத்திலேயே இந்திய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்களை அவமதிக்கும் நோக்கில் அவரை நோக்கி செருப்பை வீசியுள்ள சனாதன வெறிபிடித்த வழக்கறிஞரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மிகவன்மையாகக் கண்டிக்கிறோம்.

அந்த நபரின் வழக்கறிஞர் தகுதியை உடனடியாக ரத்து செய்யவேண்டும். அத்துடன், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் அவரைக் கைதுசெய்து சிறைப்படுத்த வேண்டும்.

செருப்பை வீசும்போது 'சனாதன தருமத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என அந்நபர் கூச்சலிட்டதாகத் தெரிகிறது. இதிலிருந்து அவர் ஒரு சனாதன சங்கி என்பது உறுதியாகிறது.

வழக்கறிஞர் Rakesh Kishore

புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைகளை உள்வாங்கியுள்ள சனநாயக சக்தியாக விளங்கும் தலைமை நீதிபதியின் மீது இங்ஙனம் வெறுப்பை உமிழ்வது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையே ஆகும். மேலும், ஒட்டுமொத்த நீதித்துறைக்கே நேர்ந்த அவமானமாகும்.

நாடெங்கிலும் சனாதனவெறியர்களின் கொட்டம் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகவுள்ளது. இந்நிலையில், சனாதனத்தை வேரறுக்க சனநாயக சக்திகள் ஓரணியில் திரளுவது காலத்தின் தேவையாக உள்ளது." எனக் கூறியுள்ளார்.

நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

தலைமை நீதிபதியைத் தாக்க முயன்ற அந்த நபர், "சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது" எனக் கூச்சலிட்டிருக்கிறார்.

இருந்தும் அவரைக் காவலர்கள் வெளியேற்றிய பின்னர் “கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது. அனைத்து மதங்களையும் மதிப்பவன் நான்" எனக் கூறிவிட்டு, எந்த பரபரப்பும் இல்லாமல் வழக்கறிஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார் தலைமை நீதிபதி கவாய்.

கேரளா: ரூ.25 கோடி ஓணம் பம்பர் லாட்டரி பரிசு; பெயின்ட் கடை தொழிலாளி கோடீஸ்வரர் ஆனார்!

கேரள மாநிலத்தில் அரசின் நிதித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் லாட்டரி துறை சார்பில் லாட்டரி சீட்டுகள் அச்சிடப்பட்டு விற்பனை நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. வாராந்திர லாட்டரி, விழாக்கால லாட்ட... மேலும் பார்க்க

கமல் ஹாசன்: விஜய்க்கு அட்வைஸ்... - பத்திரிகையாளர் கேள்விக்கு பளிச் பதில்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான கமல் ஹாசன், கரூர் த.வெ.க பிரசாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். அப்போது செய்தி... மேலும் பார்க்க

Kantara: "தர்மத்தையும் துளு நாட்டின் கலாச்சாரத்தையும் சேர்த்துள்ளார் ரிஷப் ஷெட்டி" - அண்ணாமலை ரிவ்யூ

இந்தியா முழுவதும் ஹிட் ஆகியிருக்கும் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் இன்று சமூக வலைதளத்தில் முக்கிய பேசுபொருளாக இருக்கிறது. விமர்சகர்கள், ரசிகர்கள், திரையுலகினரைக் கடந்து பல துறைகளைச் சேர்ந்தவர்கள் படக்... மேலும் பார்க்க

நீதிபதி கவாய் மீது தாக்குதல்: "இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது" - ஸ்டாலின் கண்டனம்!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீசிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தலைமை நீதிபதியைத் தாக்க முயன்ற அந்த நபர், "சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறு... மேலும் பார்க்க

'கரூர் வழக்கில் விஜய்யை குற்றவாளி ஆக்குவதா? தவெகவை திமுக நசுக்க பார்க்கிறது' - அண்ணாமலை

பாஜக-வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கரூர் விவகாரத்தில்சமூக வலைதளங்களில் நீதிபதியை விமர்சிப்பது துரதிஷ்டவசமானது. நீதிபதி குறித்து... மேலும் பார்க்க

``இது தவறோ, அலட்சியமோ அல்ல; பெரும் அரசியல் குற்றச்செயல்" -காங்கிரஸ் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சமீபத்தில் பீகாரில் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் 22.7 லட்சம் மக்களின் பெயர்களைத் திட்டமிட்டு நீக்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. கடந்த 2020 தேர்தலின்போது காங்கிரஸ் நெர... மேலும் பார்க்க