Waqf திருத்த சட்டத்தில் என்ன பிரச்னை? BJPயின் திட்டம் என்ன? | Decode | Amit Shah
CSK vs DC: 'சேப்பாக்கத்தில் சென்னை வீரருடன் நடந்த அந்த உரையாடல்..' - ரகசியம் பகிரும் குல்தீப் யாதவ்!
'சென்னை Vs டெல்லி!'
சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நாளை நடக்கவிருக்கிறது. இதற்காக இரு அணிகளும் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்புக்கு டெல்லி சார்பில் குல்தீப் யாதவ் வந்திருந்தார். சென்னை அணியின் முக்கிய பௌலரான நூர் அஹமதுவுடன் அவருடனான உரையாடைலை சுவாரஸ்யமாக பகிர்ந்துகொண்டார்.

'இப்போ இதுதான் ட்ரெண்ட்!'
குல்தீப் யாதவ் பேசுகையில், 'நான் அவ்வளவு வித்தியாசமான பௌலர் இல்லை. நானே 9 ஆண்டுகளாக ஆடி வருகிறேன். இப்போது எல்லா அணியிலுமே இடதுகை சைனாமேன் பௌலர்கள் இருக்கிறார்கள். அது புதிய ட்ரெண்டாகவே மாறியிருக்கிறது. பேட்டர்கள் என்ன செய்து ரன்கள் அடிக்க நினைக்கிறார்கள் என்பதை அறிந்து, அதற்கேற்ப என்னுடைய பலமான விஷயங்களை நம்பி வீசுவதுதான் என்னுடைய ஸ்டைல்.
டெல்லி அணியில் இது எனக்கு நான்காவது வருடம். ஒரு வீரராகவே நிறையவே பக்குவப்பட்டிருக்கிறேன். சரியான லெந்த்களில் வீசுவதுதான் என்னுடைய பலம் என நினைக்கிறேன்.

'நூர் அஹமதுவுடன் உரையாடல்!'
நூர் அஹமது சிறப்பாக பந்துவீசிக் கொண்டிருக்கிறார். தனிப்பட்ட முறையில் அவரை எனக்கு தெரியும். எல்லாரிடமிருந்தும் எதோ ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என அவர் நினைப்பார். லெக் ஸ்பின் வீசுவதைப் பற்றி நேற்றிரவு அவரும் நானும் பேசிக்கொண்டிருந்தோம். நல்ல வேகத்தில் அவர் வீசும் கூக்ளிக்கள் எப்போதும் அபாயமானவை. அதுவும் சென்னையில் ஆடும்போது மணிக்கட்டு ஸ்பின்னருக்கு எதிராக ஸ்கோர் செய்வது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும்.
'நடராஜன் அப்டேட்!'
ஷேன் வார்னேவின் வீடியோக்களை பார்த்து வளர்ந்துதான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். அகாடெமியில் என்னுடைய சீனியர் அருமையாக லெக் ஸ்பின் வீசுவார். அவரிடமிருந்தும் நிறைய கற்றுக்கொண்டேன்.

நடராஜன் காயத்திலிருந்து வேகமாக மீண்டு வருகிறார். நாளையப் போட்டியில் அவர் ஆடுவாரா என தெரியவில்லை. ஆனால், அடுத்தப் போட்டியில் அவரை கட்டாயம் எதிர்பார்க்கலாம்.' என்றார்.