செய்திகள் :

Delhi: பள்ளிகளுக்கு விடுமுறை, கட்டுமான வேலைகளுக்குத் தடை... அச்சத்தை ஏற்படுத்தும் நச்சுக் காற்று!

post image

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் அதிகாரிகள் பள்ளிகளை மூடவும், கட்டுமான வேலைகளை நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டுள்ளனர். டெல்லியில் ஏற்படும் காற்றுமாசு நீண்ட நாட்களாக செய்திகளில் பார்த்து வந்தாலும் இப்போது அபாயம் புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.

21 சிகரெட்களுக்கு சமம்!

நகருக்குமேலே நச்சுத்தன்மை கொண்ட ஸ்மாக் போர்த்தப்பட்டதுபோல காட்சியளிக்கிறது. வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் புகையும் பனியும் சேர்ந்து ஸ்மாக் உருவாகியிருந்தாலும், இதனால் டெல்லி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு காற்றின் தரக் குறியீடு AQI 969 என்ற அபாயகரமான உச்சத்தை எட்டியிருப்பதாக IQAir என்ற சுவிட்சர்லாந்து நிறுவனத்தின் நேரலை தரவரிசை காட்டுகிறது. இந்திய அளவீடுகளின் படி AQI 484 -ஐ எட்டியிருப்பதாக தேசிய மாசுக்கட்டுப்பாடு ஆணையம் கூறியுள்ளது.

Delhi Air Pollution

இந்த அளவு மாசான காற்றை சுவாசிப்பது ஒரு நபர் ஒரு நாளுக்கு 21 சிகரெட்களை பிடிப்பதற்கு சமம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

AQI அளவீடு ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபடும். டெல்லி அதிகாரிகள் இதனை கடுமையான பாதிப்பு என்கின்றனர்.

காற்றில் PM2.5 எனப்படும் 2.5 மைக்ரான் அல்லது அதற்கு குறைவான விட்டம் உள்ள நுரையீரலுக்குள் நுழைந்து பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய துகள்களின் எண்ணிக்கை உலக சுகாதார அமையம் பரிந்துரைத்ததை விட 39 மடங்கு அதிகமாக இருக்கிறது.

அபாய நிலையில் 3 கோடி மக்கள்

ஒவ்வொரு குளிர்காலத்திலும் பனியுடன் புகை இணைந்து ஸ்மாக் என்ற நச்சாக உருவாகும். இது அதிக ஆபத்தை விளைவிக்கக் கூடியது. காற்று மாசு இன்னும் மோசமாகிவிடக் கூடாது என்பதற்காக பள்ளிகளை ஆன்லைனில் நடத்த உத்தரவிட்டுள்ளனர். கட்டுமானப் பணிகளுக்கு தடை விதித்ததுடன் வாகன நடமாட்டத்தையும் கட்டுப்படுத்த நவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.

Delhi Air Pollution

குழந்தைகளை வீட்டில் இருக்க வைப்பது போக்குவரத்தைக் கட்டுப்படுத்த உதவும் என்பதனால் 10 மற்றும் 12ம் வகுப்பைத் தவிர மற்ற மாணவர்கள் ஆன்லைனில் பாடம் கற்பதாக முதலமைச்சர் அதிஷி கூறியுள்ளார்.

சிலர் வீடுகளில் ஏர் ஃபில்டர்களை பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். ஆனால் எல்லாராலும் பொருளாதார ரீதியாக அதனைப் பெற முடியவில்லை. மரணத்தை ஏற்படுத்தும், துர்நாற்றம் வீசும் புகையை சகித்துக்கொண்டு வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். டெல்லி மெட்ரோ சிட்டியை சுற்று வாழும் 3 கோடி மக்களில் பெரும்பாலோனோரின் நிலை இதுதான்.

என்ன காரணம்?

சட்டத்துக்குப் புறம்பாக விவசாய கழிவுகளை எரிப்பதனால் ஏற்பட்ட புகை 40 விழுக்காடு காற்று மாசு ஏற்பட்டதற்கு காரணம் என்கின்றனர். டெல்லியைப் போலவே ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஹரியானா மாநிலங்களும் காற்றுமாசால் பாதிக்கப்பட்டுள்ளன. காலநிலையும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. காற்றின் வேகம் குறைவாக இருப்பதும் குறைந்த வெப்பநிலையும் மாசுத் துகள்கள் வெளியில் செல்லாமல் தடுக்கின்றன.

அரசின் நடவடிக்கைகள்

டெல்லி அரசு தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டம் (Graded Response Action Plan (Grap)) என்ற திட்டத்தின் அடிப்படையில் செயல்படுகின்றனர். Grap திட்டத்தின் நான்காவது கட்டத்தை தற்போது அமல்படுத்தியிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, கட்டுமான மற்றும் இடிக்கும் பணிகள் நிறுத்தப்படுகின்றன, அத்தியாவசியமில்லாத தொழில்துறை யுனிட்கள் நிறுத்தப்படுகின்றன, டீசல் ஜெனரேட்டர்கள் மற்றும் பி.எஸ் 4 இல்லாத வாகனங்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படுகிறது, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

Delhi Air Pollution

Grap நான்காம் கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆம் ஆத்மி அரசு அதிக காலம் எடுத்துக்கொண்டதாக உச்ச நீதிமன்றம் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அவலநிலை

இந்த கடுமையான காற்றுமாசு, சுவாசப் பிரச்னைகளையும் இதய நோயையும் உருவாக்கக் கூடியது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் இருக்கவும், வெளியில் வரும்போது என்95 மாஸ்க் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேவையில்லாத உடல் செயல்பாடுகளைத் தவிர்க்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஆனால் அன்றாட வாழ்க்கைத் தேவைகளைச் சந்திக்க மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். இது பலருக்கும் கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகளை உடனடியாக ஏற்படுத்தினாலும் வேறு வழியில்லாத நிலையே இருக்கிறது.

Delhi: `காற்றுமாசால் ஆயுட்காலம் குறைகிறது’... அவதிப்படும் டெல்லி மக்கள் - அதிர்ச்சி தகவல்கள்

டெல்லியில், காற்று மாசுபாடு என்பது அபாயகரமான நிலையை எட்டி இருக்கிறது. இந்த காற்றை சுவாசிப்பது ஒரு நாளைக்கு 25 முதல் 30 சிகரெட் பிடிப்பதற்கு சமமாகும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இது மனிதனின் ஆயுள் காலத்த... மேலும் பார்க்க

UP: நெடுஞ்சாலை பணிகள் நடந்த இடத்தில் மண் சரிவு - 10 வயது குழந்தை உட்பட 4 பெண்கள் பலியான சோகம்!

உத்தரப்பிரதேசம் மாநிலம் கஸ்கஞ்ச் பகுதியில் திடீரென மண் குன்று சரிந்ததில் குறைந்தது 4 பெண்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சில பெண்கள் படுகாயமடைந்துள்ளனர். பெண்கள் தங்கள் வீடுகள... மேலும் பார்க்க

``இனிவரும் காலங்களில் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும்!'' - காரணம் பகிர்ந்த பூவுலகு சுந்தர்ராஜன்

இனி வரும் நாள்களில் புயல்கள் வலிமையாகும் என மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்திருக்கிறது."காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராக வேண்டும். வரும் காலங்களில் உருவாகும் புயல்கள் மிகவும் வல... மேலும் பார்க்க

நெல்லையில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி.. | Photo Album

நெல்லையில் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தீயணைப்பு துறை நடத்திய பேரிடர் தடுப்பு ஒத்திகை பயிற்சி.! மேலும் பார்க்க

குன்னுார் கனமழை: சாலையில் விழுந்த மரங்கள், மண் சரிவு, சேதமடைந்த வீடுகள்.. |Photo Album

குன்னுார் காந்திபுரம் பகுதியில்..குன்னுார் காந்திபுரம் பகுதியில்..வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லுாரி அருகே...சேதமடைந்த நடைப்பாதை...தடுப்புச் சுவர் இடிந்து...பொதுமக்கள் பயன்படுத்தும் பாலம்..ஊராட்சி ஒன... மேலும் பார்க்க

குடியிருப்புகளைச் சூழ்ந்த மழை நீர்; கனமழையால் திணறும் மதுரை... Photo Album

மழை வெள்ளத்தில் மிதக்கும் மதுரை மழை வெள்ளத்தில் மிதக்கும் மதுரை மழை வெள்ளத்தில் மிதக்கும் மதுரை மழை வெள்ளத்தில் மிதக்கும் மதுரை மழை வெள்ளத்தில் மிதக்கும் மதுரை மழை வெள்ளத்தில் மிதக்கும் மதுரை மழை வெள்... மேலும் பார்க்க