சென்செக்ஸ் 241 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 23,500 புள்ளிகளுக்கும் கீழே முடிந்தது; ட...
``இனிவரும் காலங்களில் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும்!'' - காரணம் பகிர்ந்த பூவுலகு சுந்தர்ராஜன்
இனி வரும் நாள்களில் புயல்கள் வலிமையாகும் என மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
"காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராக வேண்டும். வரும் காலங்களில் உருவாகும் புயல்கள் மிகவும் வலிமையானதாக இருக்கும்" என்று மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளரான ரவிச்சந்திரன் நேற்று செய்தியாளர் சந்திப்பின்போது கூறியிருந்தார்.
இந்நிலையில் இதுதொடர்பாக 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பின் சுந்தர்ராஜனிடம் தொடர்புக் கொண்டு பேசினோம். இதுதொடர்பாக பேசிய அவர், "கடலின் வீரியம் அதிகரித்துவிட்டது. இனிவரும் காலங்களில் புயலின் தாக்கம் அதிகமாகத்தான் இருக்கும். பெருங்கடலில் ஏற்படும் அதிக வெப்ப அலைகளால் தற்போதும் சரி, இனி வரக்கூடிய நாள்களிலும் சரி புயல்களின் வலிமை அதிகமாக இருக்கும். இயல்பாக புயல் உருவாகக் கூடிய காலக்கட்டம் குறைவுதான். பொதுவாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது என்றால் அது புயலாக மாறுவதற்கு 48 மணி நேரத்தில் இருந்து 72 மணி நேரம் ஆகும்.
ஆனால் இப்போது எல்லாம் காற்றழுத்தத்தாழ்வு பகுதி மிக விரைவில் புயலாக மாறிவிடுகிறது. 'தானே' புயலைப் பொறுத்தவரை காற்றழுத்தத் தாழ்வு பகுதி புயலாக மாற 10 நாள்கள் எடுத்துக் கொண்டது. ஆனால் 'ஒக்கி' புயல் எல்லாம் 6 மணி நேரத்தில் உருவாகிவிட்டது.
இப்போதெல்லாம் புயல் வலுவிழந்துக் கரையைக் கடந்தாலும் அதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் கடலில் ஏற்படும் வெப்ப அதிகரிப்புதான். இதைத் தடுக்க வேண்டும் என்றால் நாம் கார்பனின் அளவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb