செய்திகள் :

Diwali: ``அதைப் பார்க்க ஸ்வர்ணலதா இல்லைன்னு வருத்தப்பட்டேன்!" - புஷ்பவனம் குப்புசாமி பேட்டி

post image

`கிராமத்துக் கதை, அதிலொரு நாட்டுப்புறப் பாடல் இருக்க வேண்டும்' என ஒரு படத்தின் இயக்குநர் சூழலைச் சொல்லி முடித்த அடுத்த நொடியே இசையமைப்பாளர்களுக்கு நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் முகமும், ஓங்கிய குரலும்தான் நினைவுக்கு வரும். இப்படி சட்டென நினைவுக்கு வருமளவுக்கு திரையிசைக்கும், நாட்டுப்புற இசைக்கும் பெரும் பங்காற்றியிருக்கிறார் புஷ்பவனம் குப்புசாமி.

சமூக வலைதளங்களில் அவரின் பாடல்களும் தற்போது தொடர்ந்து வைரலாகிக் கொண்டிருக்கின்றன. `குட் பேட் அக்லி' படத்தில் இவரின் `தொட்டு தொட்டு பேசும் சுல்தானா' பாடலைப் பயன்படுத்தியது சமீபத்தில் வைரலானது பலருக்கும் நினைவிருக்கலாம். திரையிசையைத் தாண்டி இவரின் நாட்டுப்புறப் பாடல்களையும் ரீமேக் செய்து வைப் செய்கின்றனர் ஜென் சி-கள்.

Idly Kadai | இட்லி கடை
Idly Kadai | இட்லி கடை

சமீபத்தில் வெளிவந்த `இட்லி கடை' படத்தில் இவர் பாடிய `எத்தனை சாமி' பாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்நிலையில், நம் விகடன் டிஜிட்டல் தளத்தின் தீபாவளி ஸ்பெஷலுக்காக அவரைப் பேட்டி கண்டேன்.

தீபாவளி வாழ்த்து சொல்லி பேசத் தொடங்கியதும், "வணக்கம்ங்க. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். தீபாவளின்னு சொன்னதும் பலருக்கு நினைவுக்கு வருவது பட்டாசும் புத்தாடைகளும்தான். ஆனா, என்னைப் பொறுத்தவரை அன்றைய தினம் ஒவ்வொரு இல்லங்களில் ஏற்றப்படும் ஒளிதான் என் நினைவுக்கு வரும்.

அதுக்குதான் முக்கியத்துவம் அளிப்போம். சின்ன வயசுல, எங்க வீட்டுல புத்தாடைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பாங்க. பட்டாசு வாங்கித் தர மாட்டாங்க. ஆனா, நாங்க யாருக்கும் தெரியாமல் பட்டாசு வாங்கி, எங்களுடைய தந்தை இல்லாத நேரம் பார்த்து அதை வெடிச்சு மகிழ்ந்த நினைவுகளெல்லாம் இருக்கு," என்றவர் புத்துணர்ச்சியுடன் கேள்விகளுக்கு ஆயத்தமானார்.

̀இட்லி கடை' திரைப்படத்தில் வரும் `எத்தனை சாமி' பாடலுக்கு நல்ல வரவேற்பு தந்து அப்பாடல் குறித்து சோசியல் மீடியா பக்கங்களில் பலர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதை கவனித்தீர்களா?

பார்த்துட்டிருக்கேனே! அந்தப் பாடலும் இப்போ சமூக வலைதளப் பக்கங்கள்ல வைரலாகப் போயிட்டிருக்கு. அந்தப் பாடலுக்கு பின்னாடி ஒரு கதை இருக்கு. அதைச் சொல்றேன், கேளுங்க! அந்தப் பாடலுக்கான அழைப்பு வந்ததும் நான் ஜி.வி. பிரகாஷ் ஸ்டூடியோவுக்குப் போனேன். அங்க உள்ளே நுழையும்போது, என் அப்பாவுக்கு கீழே விழுந்து தலையில அடிப்பட்டிருச்சுன்னு எனக்குச் சொன்னாங்க. எனக்கு அந்த நேரத்திலிருந்து நினைப்பு முழுவதும் எங்க அப்பாவின் உடல்நிலை மீதுதான் இருந்தது. உள்ளே போனதும், பெரியளவுல இசை நுணுக்கங்கள் இல்லாமல் பாடணும்னு ஜி.வி சொன்னாரு. ஆனா, என்னுடைய மனநிலை சோகமாக இருந்ததுனால, பாடலையும் நான் சோகமாகவே தொடர்ந்து பாடிட்டு இருந்தேன். பிறகு என்னுடைய தந்தைக்கு இப்படி ஆகிடுச்சுன்னு சொல்லிட்டு நான் அங்கிருந்து கிளம்பிட்டேன். அப்பாவைப் பரிசோதித்த மருத்துவர்களும் `அப்பாவுக்கு ஒண்ணுமில்ல'னு சொல்லிட்டாங்க. அதற்கடுத்த நாள் தனுஷ் சாரே ரெக்கார்டிங் வந்துட்டாரு. அவர் சொன்னபடி நான் பாடினது அவருக்கும் மிகவும் திருப்தியா இருந்தது. முடிச்சதும், உங்க அப்பாவுக்கு விபத்து நடந்திருச்சுன்னு கேள்விப்பட்டேன். எந்த உதவியாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்க. எனக்கு மருத்துவர்களைத் தெரியும். பார்த்துக்கலாம், தைரியமா இருங்க'ன்னு தெம்பூட்டினார்.

புஷ்பவனம் குப்புசாமி
புஷ்பவனம் குப்புசாமி

சமூக வலைதள டிரெண்டில் உங்களுடைய பழைய பாடல்கள் அவ்வபோது வைரலாகின்றன, அதுபோல, உங்களுடைய நாட்டுப்புறப் பாடல்கள் பலவும் ரீமிக்ஸ் செய்யப்படுகின்றன. டிஜிட்டல் வளர்ச்சி இசைத்துறைக்கு எப்படியான ஒரு பங்காற்றுகிறது?

ரொம்ப நல்ல விஷயம்ங்க இது. இப்படியான விஷயங்களையும் நிகழ்த்திக் காட்ட முடியும்னு நினைக்கிறாங்க பாருங்க! பாடலைப் புதுப்பிச்சு டிஜிட்டல் முறைக்கேற்ப கொண்டு வர்றது எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கு. டிஜிட்டல் வளர்ச்சியினால் பல பாடல்களுக்கும் புது வடிவங்கள் கிடைக்குது. அதனுடைய தன்மை மாறாமலும், கெடாமலும் அதை டிஜிட்டலுக்குக் கொண்டு வருவதும் நல்லது. சில வழிகளில் டிஜிட்டல் பாடகர்களைச் சோம்பேறியாக்குதுன்னு நான் சொல்வேன். இப்போ நாம் வெறுமே பாடினாலே அதை மெருகேற்றிக் கொண்டு வர்றதுக்கு டிஜிட்டலில் பல வசதிகள் இருக்கு. அது அந்தப் பாடலுக்கு வேணும்னா உதவலாம். அந்தப் பாடலைப் பாடிய பாடகருக்கு அது உதவாது. இசைத்துறையில ஏ.ஐ போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை நான் வரவேற்கணும்னு சொல்லமாட்டேன். மறைந்த பாடகர்கள் நமக்குக் கொடுத்த அந்த உணர்வையே ஏ.ஐ மூலமா உருவாக்கிய பாடலும் கொடுக்கலாம். ஆனா, மறைந்த பாடகர்கள் பாடல்களைப் பாடிட்டு அடுத்து வரும் பாடகர்களுக்கு வழி அமைத்துவிட்டுப் போயிட்டாங்க. இப்படியான நேரத்திலும் அவங்க குரலைக் கொண்டு வர்றேன்னு செய்யுற விஷயத்துல எனக்கு உடன்பாடில்ல.

நீங்களும் ஒரு யூட்யூப் சேனல் வைத்திருக்கிறீர்கள். டிஜிட்டல் உங்களுக்கு எப்படியான வழிகளில் உதவுகிறது?

நான் சமீபத்துல என்னுடைய அடுத்த ஆல்பத்திற்கான வேலைகளுக்காக சில இசைக் கலைஞர்களை அழைத்திருந்தேன். பல முயற்சிகள் செய்துப் பார்த்தோம். அவங்க பண்ணினது எனக்கு முழுமையாகவே இல்ல. பிறகு, மற்றொரு குழுவினரை அழைச்சு வேலைகளை கவனிச்சேன். அவங்க ரிதம்பேட்னு ஒண்ணு இருப்பதாகச் சொல்லி அதில் இசையை அமைத்துக்கொடுத்தாங்க. அது நான் எதிர்பார்த்த விஷயத்தைக் கொடுத்தது. நம்ம பாரம்பரிய விஷயங்களைப் பாதிக்காமல் இருக்கிற வரைக்கும் அதை நாம ஏத்துக்கலாம்.

Swarnalatha
Swarnalatha

நீங்களும் மறைந்த பாடகி ஸ்வர்ணலதாவும் இணைந்து சில பாடல்கள் பாடியிருக்கிறீர்கள். `தொட்டு தொட்டு பேசும் சுல்தானா' பாடல் சமீபத்தில் அதிரடி வைரலானது. அவங்களை நினைவுபடுத்தி பலரும் அப்போது பாராட்டினார்கள். ஆனால், அப்படியான ஒரு மகிழ்ச்சியான நேரத்தை அனுபவிக்க ஸ்வர்ணலதா இல்லையே என எவ்வளவு மிஸ் செய்தீர்கள்?

வருத்தம் இல்லாமல் எப்படி இருக்கும்! அந்த நேரத்துல நான் ரொம்பவே வருத்தப்பட்டேன். இப்படியான பாராட்டுகளையும் டிரெண்டையும் அவங்களும் இருந்திருந்தா பார்த்திருப்பாங்களேங்கிற வருத்தம் இருந்தது. அவங்களுடைய குரல் ஒரு தனித்துவமான குரல். எதை வேணாலும் இமிடேட் பண்ணலாம். ஆனா, அவங்களுடைய குரலை இமிடேட் பண்றது ரொம்பவே கஷ்டம். இத்தனை ஹிட் பாடல்கள் பாடியிருக்கோம், பாராட்டுகளை வாங்குறோம்னு தலைக்கணம் எதுவும் அவங்களுக்கு இருக்காது. ரொம்பவே இயல்பாகப் பழகக்கூடியவங்க ஸ்வர்ணலதா.

மலையாளம், தெலுங்கு என பிற மொழிகளிலும் நீங்கள் ஒரு சில பாடல்களைப் பாடியிருக்கிறீர்கள். ஏன் இப்போது அதைத் தொடர்ந்து செய்வதில்லை?

நான் தெலுங்கு, மலையாளம்னு பயணிச்சிருக்கேன். தெலுங்குல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியிருக்கேன். வாய்ப்புகள் வந்திருக்கணும். ஆனா, பெருசா அங்கிருந்து வரலைங்கிறதுதான் உண்மை. அதைப் பத்தின ஏக்கமும் எனக்கு இருக்கு. ஏன் நம்மை அங்க பாட அழைக்க மாட்டேங்குறாங்கன்னு எண்ணம் இருக்கு. இனி வரும் நாட்கள்ல அது மாறலாம். வாய்ப்புகள் வரலாம்.

Pushpavanam Kuppusamy
Pushpavanam Kuppusamy

2004 முதல் 2010 வரை முக்கியமான நடிகர்களுடைய படங்களின் ஹிட் ஆல்பங்களில் புஷ்பவனம் குப்புசாமியின் பெயரே அதிகமாகக் காணப்படுகிறது. அப்போது தொடர்ந்து இப்படியான வாய்ப்புகளும், ஹிட் பாடல்களும் அமைந்தது எப்படி?

அந்த நேரத்தில் மக்களிசையைப் பாடுவதற்கு நான் ஒருத்தன்தான் இருந்தேன். அதற்கு வழிபோட்டதும் நான்தான்னு பெருமையாகச் சொல்வேன். மக்களிசையைப் பல அரங்குகளுக்கு மரியாதையுடன் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு இருந்தது. அதை நான் சிறப்பா செஞ்சேன். ஆட்டமில்லாமல் உட்கார்ந்து மக்களிசைக்கு மரியாதை கொடுக்கும் வகையில் நான் பாடினேன். நான் நாட்டுப்புற இசையைத்தான் மக்களிசை எனச் சொல்வேன். பின்னாடி வந்தவங்க, ஆட்டமாடி பாடலை இரண்டாம் பட்சமாகக் கொண்டு போயிட்டாங்க. அதுல எனக்கு கொஞ்சம் வருத்தம். அப்போ நானொருத்தான் இருந்தேன். இவர் பாடினால் நல்லாயிருக்கும்னு காத்திருந்து ரெக்கார்ட் பண்ணியது உண்டு. நான் அப்போ ரொம்ப பிஸியாக இருந்தேன். தொடர் வெளிநாடு கச்சேரிகள் பங்கேற்றிருக்கேன். அதனால பல திரைப்படங்களில் பாடும் வாய்ப்புகளை இழந்திருக்கேன். இல்லைனா நான் நிறைய பாடல்கள் பாடியிருப்பேன். அப்போதும் நான் சம்பாதிக்கிறதுக்கு போகல. நம்முடைய ஈழத் தமிழர்களுக்காக நான் அங்க போய் பாடினேன்.

புஷ்பவனம் குப்புசாமி பாடிய பாடல்களில் உங்களுக்கு பிடித்த பாடலை கமென்ட்டில் பதிவிடுங்கள்!

``என் மனைவி கடவுள் கொடுத்த கிஃப்ட்!'' - நடிகராக அறிமுகமாகும் `ஜேசுரதி' மகன் பிரகன் பேட்டி

குடும்பத்துக்கு ஒருவர் இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிடுவதையெல்லாம் ஓவர்டேக் செய்து, குடும்பமே சேர்ந்து டான்ஸ், காமெடி ரீல்ஸ்களால் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருப்பவர்கள்தான் தாய் ஜேசுரதி, மகள் பிரக்யா, மகன் பிர... மேலும் பார்க்க

Melodi Dorcas: ``ஸ்கின் கலர் பார்த்து ஸ்கிரிப்ட் எழுதும் சினிமா?'' -நடிகை மெலொடியின் அசத்தலான பேட்டி

மெலோடி டார்கஸ் (Melodi Dorcas) என்றப் பெயர் திரை ரசிகர்களிடம் அறிமுகமில்லாமல் இருக்கலாம். ஆனால் இவரின் முகம் எல்லோர் மனதிலும் அழுத்தமாகப் பதிந்திருக்கும். தமிழில் வெளியான 'அயலி' வெப் சீரிஸ் மூலம் தமிழ... மேலும் பார்க்க

`பொல்லாதவன்' முதல் `பைசன்' வரை - 20 ஆண்டுகளில் தீபாவளியை திருவிழா ஆக்கிய படங்கள்!

தீபாவளி என்றில்லை எந்தவொரு கொண்டட்டத்தையும் சினிமா இல்லாமல் கடக்க முடியாது. குடும்பமாக அமர்ந்து தொலைக்காட்சியில் திரைப்படம் பார்ப்பதிலிருந்து திரையரங்கில் ஆட்டம்போதுவது வரை ஏதோ ஒரு வகையில் திரைப்படங்க... மேலும் பார்க்க

Diwali ''நான் 'கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்' பொண்ணு'' - நடிகை ஜெயா சீல் பேட்டி

'கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா...' - 2000-ல் லவ் பண்ணவங்கள்ல ஆரம்பிச்சி, 2000-ல பிறந்து இப்போ லவ் பண்றவங்க வரைக்கும், இந்தப் பாட்டு இன்னமும் எவெக்ரீன் 'லவ் சாங்'காகத்தான் இருக்கு. இந்தப் பாட்ட... மேலும் பார்க்க

Bison: `` ̀பைசன்'ல நடிக்கிறதுக்கு கபடியும், மாரி சாரும்தான் காரணம்!" - கபடி வீரர் பிரபஞ்சன் பேட்டி

அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை மையமாக வைத்து 'பைசன்' படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். இந்திய கபடி அணியின் முன்னாள் கேப்டன் ராஜரத்தினத்தின் பிரதிபலிப்பாக வ... மேலும் பார்க்க

Diwali Release Movies Review: `பைசன்', ̀டியூட்', ̀டீசல்' - தீபாவளி ரிலீஸ் படங்களின் விகடன் விமர்சனம்

பண்டிகை தினங்களில் வெளியாகும் திரைப்படங்கள் எப்போதுமே ஸ்பெஷல்தான்! அப்படி இந்தாண்டு தீபாவளி ரிலீஸாக மாரி செல்வராஜின் 'பைசன்', பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்', ஹரிஷ் கல்யாணின் 'டீசல்' என மூன்று தமிழ் திரை... மேலும் பார்க்க