செய்திகள் :

Diwali : காட்டன் டிரெஸ் தீப்பிடிக்கும்; ஆனால், பட்டாசு வெடிக்கையில் அதையே உடுத்த வேண்டும் - ஏன்?

post image

நாளை தீபாவளி ‌என்பதாலேயே இரவெல்லாம் தூங்காமல் கனவு கண்டு, அலாரம் இல்லாமலேயே காலையில் எழுந்து, குளித்து புத்தாடைகளெல்லாம் அணிந்து, நேராக நாம் போகும் இடம் எங்கே..?

வீட்டு வாசலுக்குத்தான். இந்த தீபாவளிக்கென்றே எக்ஸ்குளூசிவ் ஆக வாங்கிய பட்டாசுகளை வெடிக்க வேண்டாமா..? அதே நேரம், ஆசையாக வாங்கிய பட்டாசுகளை கவனமாக வெடிக்கவில்லை என்றால் ஆபத்தில் முடியக்கூடும்.

Deepavali
Deepavali

ஏன் பட்டாசு வெடிக்கும்போது காட்டன் உடை உடுத்த வேண்டும் என, சேலத்தில் உள்ள இந்திய கைத்தறி தொழில்நுட்ப கழகத்தில் கைத்தறி தொழில்நுட்பம் மற்றும் ‌துகிலியல் துறையில் (Handloom and Textile Technology) பணியாற்றி வரும் பேராசிரியர் முனைவர் த.கோபி கண்ணன் சொல்வதைக் கேளுங்கள்!

''பொதுவாகவே தீபாவளிக்கு விலையுயர்ந்த, ஆடம்பரமான, அதிக வேலைப்பாடுகள் நிறைந்த ஆடைகள் உடுத்துபவர்கள் உண்டு. அதில் தவறில்லை. ஆனால், பட்டாசு வெடிக்கும்போது உடலில் தீக்காயங்கள் ஏற்படுவதைத் தடுக்க உகந்த துணி, நம் எல்லாருக்கும் தெரிந்த காட்டன் எனப்படும் பருத்திதான். காட்டன் உடைகளும் எளிதாக தீ பற்றி எரியக்கூடியதே என்றாலும் அதை அணிவதே பாதுகாப்பு.

Deepavali
Deepavali

எடுத்துக்காட்டாக, தீபாவளி அன்று ஒருவர் காட்டன் உடை அணிந்தும், மற்றொருவர் synthetic fabric வகையில் ஒன்றான பாலியஸ்டர் உடையை அணிந்துகொண்டு பட்டாசுகளை வெடிக்கிறாரென்று வைத்துக்கொள்வோம். இவை இரண்டில், காட்டன்தான் விரைவாக தீ பிடிக்கக்கூடியது. ஆனால், காட்டன் டிரெஸ்ஸில் தீப்பிடித்து பரவும் நேரத்திற்குள் பாலியஸ்டர் உருக தொடங்கிவிடும்.

காட்டன் அணிந்திருப்பவரின் உடையில் தீப்பிடிக்க தொடங்கியவுடன் தீ உடையில் பரவி பிறகுதான் தோலைத் தொடும். ஆனால், பாலியஸ்டர் அணிந்திருப்பவருக்கு அப்படி அல்ல. அந்தத் துணி ஒரு மெழுகு போல் உருகி தோலின் மீது படிந்து கொப்பளங்களை உருவாக்கும். தோலை உரிக்கக்கூடும். அதனால், காட்டனைக் காட்டிலும் பாலியஸ்டர் ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகம். பட்டும் இயற்கையில் இருந்து கிடைக்கும் இழைதான். பட்டாடையையும் பட்டாசு வெடிக்கும்போது உடுத்தலாம். ஆனால், அதைவிட காட்டன் உடுத்துவதே சிறந்தது'' என்கிறார்.

பட்டாசால் தீக்காயம் ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது என, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி துறையில் பணியாற்றி வரும் மருத்துவர் ஐஸ்வர்யா கூறுவதையும் கேளுங்கள்.

டாக்டர் ஐஸ்வர்யா மற்றும் பேராசிரியர் முனைவர் த.கோபி கண்ணன்
டாக்டர் ஐஸ்வர்யா மற்றும் பேராசிரியர் முனைவர் த.கோபி கண்ணன்

ஆண்டுதோறும் தீபாவளி அன்றைக்கு நிறைய மக்களுக்கு தீக்காயங்கள் ஏற்படுகின்றன. மக்கள் சற்று விழிப்புணர்வோடு இருந்தால், இதைத் தடுக்கலாம். பெரும்பாலும் சேலையின் முந்தானை, துப்பட்டா, வேட்டி போன்றவற்றில் தீ பிடிப்பதுதான் அதிகமாக இருக்கிறது. அதிலும் பாலியஸ்டர் உடை அணிவதால் ஏற்படும் தீக்காயங்கள்தான் அதிகம். சின்ன பிள்ளைகளுக்கு பெரும்பாலும் கைகள், முகத்தில்தான் தீக்காயங்கள் ஏற்படுகின்றன.

பட்டாசு வெடிக்கும்போது ஆடையில் தீப்பிடித்தால், உடனே அதை தண்ணீர் கொண்டு அணைத்துவிட்டு, தீக்காயம் பட்ட இடத்தில் தண்ணீர் (Running Water) கொண்டு நன்றாக கழுவ வேண்டும். அப்போதுதான் அந்த பட்டாசுகளில் இருக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த வெடி மருந்துகள்/ ரசாயனங்கள் நம் உடலுக்குள் நுழைவதை தடுக்க முடியும். சிலர், முதலுதவி என்று நினைத்து தீக்காயம் மீது 'டூத் பேஸ்ட்' தடவுகிறார்கள். இதை கண்டிப்பாக செய்யக்கூடாது.

பலத்த காயமாக இருந்தால், நிச்சயமாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்வதுதான் நல்லது. தவிர, பிள்ளைகள் பட்டாசு வெடிக்கையில் மூக்கை மறைக்கும்படி மாஸ்க் அணிவது நல்லது. முடிந்தால் கண்களை மறைக்க சிறுவர்களுக்கான கண்ணாடிகூட அணியலாம்'' என்கிறார். அரசு குறிப்பிட்டிருக்கும் விதிமுறைகளை மதித்து, கவனமாக தீப ஒளித் திருநாளை கொண்டாடுவோம்..!

Doctor Vikatan: இதயத்தின் ரத்தக்குழாய்களில் அடைப்பு; ஆஞ்சியோ, சிடி ஆஞ்சியோ எது பெஸ்ட்?

Doctor Vikatan: இதயத்தின் ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பதை ஆஞ்சியோகிராம் மூலம் கண்டுபிடிக்கிறோம். இந்த டெஸ்ட்டுக்கு பதில் சிடி ஆஞ்சியோ செய்யலாம், ஸ்கேன் மாதிரி சுலபமான டெஸ்ட் அது என்கிறார்களே! அது ... மேலும் பார்க்க

'ORS' லேபிள் ஒட்டுவதற்கு எதிராகப் போராடி வென்ற பெண் டாக்டர்; அதிர்ச்சியான காரணம் இதோ!

ஒரு மருத்துவரின் போராட்டமும் தடை உத்தரவும்...வாந்தி மற்றும் பேதியால் அவதிப்படும் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் மருத்துவர்கள் பரிந்துரைப்பது ஓ.ஆர்.எஸ் பாக்கெட்டுகளைத்தான்(ORS - Oral Rehyd... மேலும் பார்க்க

Doctor Vikatan: சீக்கிரமே உடல் பருமனைக் குறைக்க உதவுமா சித்த மருந்துகள்?

Doctor Vikatan: நான் பல வருட காலமாக உடல் எடையைக் குறைக்கப்போராடிக் கொண்டிருக்கிறேன். உடல் எடையைக் குறைக்க உதவுவதாகச்சொல்லும் மாத்திரைகள்கூடபயன்படுத்தியிருக்கிறேன். ஆனால், எதிலுமே எனக்குத் தீர்வு கிடைக... மேலும் பார்க்க

`ஆலப்போல், வேலப்போல்'- எந்த மரத்தின் குச்சி என்ன பலன் தரும் நம் பற்களுக்கு?

கருவேல மரக்குச்சியில் பல் துலக்கினால், பற்கள் மட்டுமல்ல ஈறுகளும் சேர்ந்து திடமாகும்; வேப்ப மரத்தின் குச்சியைக் கொண்டு பல் துலக்கினால், பற்கள் தூய்மையாகும். நீர் புலா மரக்குச்சியால் பல் துலக்கினால், ஆண... மேலும் பார்க்க

Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் வயிற்றைச் சுற்றி கடுமையான அரிப்பு; காரணமும் தீர்வுகளும் என்ன?

Doctor Vikatan: நான்இப்போது 7 மாத கர்ப்பமாக இருக்கிறேன். வயிற்றைச் சுற்றிலும் அரிப்பு ஆரம்பித்திருக்கிறது. நாளாக ஆக இது அதிகரிக்கிறது. சொரிந்து சொரிந்து புண்ணாவதுதான் மிச்சம். இப்படிச் செய்தால் தழும்ப... மேலும் பார்க்க

இரவு 7 மணிக்குள் டின்னர்; கிடைக்கும் 10 பலன்கள்! எல்லோரும் ட்ரை பண்ணலாமே

எல்லா மருத்துவர்களும் தினமும் மாலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் இரவு உணவை முடித்துவிடச் சொல்கிறார்கள். 6 - 7 மணிக்குள் இரவு உணவை முடிப்பது எல்லோருக்கும் சாத்தியமா? இதை நடைமுறைப் படுத்துவதற்கான வழிமுற... மேலும் பார்க்க