வங்காளதேசம்: டாக்கா விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து; விமான சேவைகள் பாதிப்பால...
Diwali Leave: ``அக்., 21 ஆம் தேதி பொது விடுமுறை" - தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக அரசு அறிவிப்பு
தீபாவளி பண்டிகை வரும் திங்கள் கிழமை (அக்டோபர் 20) வருவதை முன்னிட்டு வெளியூர்களில் வேலை பார்க்கும் பலரும் தங்களின் சொந்த ஊர் நோக்கி இன்றே படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.
தமிழகத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்குச் செல்ல சிறப்புப் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில், அக்டோபர் 21-ம் தேதி அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்குப் பொது விடுமுறை அறிவித்து அதற்குப் பதில் அக்டோபர் 25-ம் தேதி வேலைநாளாக அறிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு.

அந்த அறிக்கையில், ``இந்த ஆண்டு 20.10.2025 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர் தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு 21.10.2025 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் 25.10.2025 அன்று பணி நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.