செய்திகள் :

Doctor Vikatan: டூத் பேஸ்ட்டா, பல் பொடியா... இரண்டில் எது சிறந்தது, கைகளால் பல் துலக்கலாமா?

post image

Doctor Vikatan: என்னுடைய நண்பர் ஒருவர், பல வருடங்களுக்குப் பிறகு டூத் பேஸ்ட் உபயோகிப்பதை நிறுத்திவிட்டு, பல் பொடி பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார். மருத்துவர் பரிந்துரைத்ததாகச் சொல்கிறார். பல் துலக்க டூத் பேஸ்ட் பயன்படுத்துவது சரியா அல்லது பல் பொடி பயன்படுத்துவது சரியா...? விரல்களால் பல் துலக்குவது சரியா?

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த பல் மருத்துவர் மரியம் சஃபி

பல் மருத்துவர் மரியம் சஃபி

பற்களைச் சுத்தப்படுத்த டூத் பேஸ்ட்தான் சிறந்தது என்பதில் பலருக்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை. உங்கள் நண்பருக்கு எந்த மருத்துவர், எதற்காக அதைப் பரிந்துரைத்தார் என்ற தகவல்கள் இல்லை.

பல் பொடி என்பது தூளாக இருப்பதால்,  அதில் பற்களை, எனாமலை பாதிக்கும்  சொரசொரப்புத் தன்மையை ஏற்படுத்தும் ஏஜென்ட்டுகள் அதிகம் இருக்கக்கூடும். தொடர்ந்து பல் பொடியை உபயோகித்து, பல் துலக்குபவர்களுக்கு, பற்கள் சீக்கிரமே தேய்ந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம். டூத் பேஸ்ட் என்பது சொரசொரப்புத்தன்மை அற்றதாக இருப்பதால், அதை உபயோகிப்பதுதான் பற்களுக்குப் பாதுகாப்பானது. பேஸ்ட் வைத்துப் பல் துலக்கும்போது வாயும் பற்களும் சுத்தமான உணர்வு கிடைக்கும். 

டூத் பேஸ்ட்

பற்களைத் துலக்க டூத் பிரஷ் கண்டிப்பாக உபயோகிக்க வேண்டுமா, வெறும் விரல்களால் பல் துலக்கினால் போதாதா என்று கேட்டிருக்கிறீர்கள். சரியான டூத் பிரஷ்ஷை பயன்படுத்தி, பல் துலக்கும்போது, பற்களின் இடுக்குகளில் உள்ள அழுக்கு, உணவுத்துகள்கள் போன்றவை எல்லாம் வெளியேறும். அதுவே விரல்களால் பல் தேய்த்தால், உங்களால் மேலோட்டமாக மட்டும்தான் தேய்க்க முடியும். விரல்களை பல் இடுக்குகளுக்குக் கொண்டு போக முடியாது. 

பற்கள் முறைப்படி சுத்தப்படுத்தப்பட்டால்தான் வாய் ஆரோக்கியமாக இருக்கும். இல்லாவிட்டால் வாய் துர்நாற்றம், சொத்தைப் பற்கள், பல் தொடர்பான பிற பாதிப்புகள் ஏற்படலாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: ஸ்டென்ட், பைபாஸ் தேவையில்லையா... இதய நோயாளிகளைக் காப்பாற்றுமா EECP சிகிச்சை?

Doctor Vikatan: 'உங்களுக்கு நெஞ்சுவலி உள்ளதா, மூச்சுத்திணறல் உள்ளதா, ஆஞ்சியோபிளாஸ்டியோ, அறுவை சிகிச்சையோசெய்து கொள்ள பயமா... தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஈஈசிபி (EECP ) சிகிச்சையைச் செய்துகொள்ள எங்க... மேலும் பார்க்க

ECI - `30% வாக்குகள் வித்தியாசம்!' - பகீர் கிளப்பும் BJD | DMK | BJP | GST | Odisha Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், * பள்ளிகளில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான ‘ஆல் பாஸ்’ முறையை மத்திய கல்வி அமைச்சகம் ரத்து செய்துள்ளது. * ‘பொருத்தமற்றது; யூனியன் அரசு பள்ளிகள் தவிர...!’ - கட்டாய பாஸ் ... மேலும் பார்க்க

MGR நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், சசிகலா, தினகரன்... மலர் தூவி அஞ்சலி! |Photo Album

எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதைஎம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதைஎம்ஜிஆர் நினைவிடத்தில் ஓபிஎஸ் மரியாதைஎம்ஜிஆர் நினைவிடத்தில் சசிகலா மரியாதைஎம்ஜிஆர் நினைவிடத்தில் ஓபிஎஸ் ... மேலும் பார்க்க

``இஸ்மாயில் ஹனியேவின் தலையைப் போல உங்கள் தலைவர்களின் தலையையும் துண்டிப்போம்" -எச்சரிக்கும் இஸ்ரேல்!

ஒரு வருடத்தைக் கடந்து இஸ்ரேல் - ஹமாஸ் குழுவுக்கு மத்தியில் போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் ஆயிரகணக்கானவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில்... மேலும் பார்க்க

Menopause: சிவப்பரிசிப் புட்டு முதல் முருங்கைப் பூ கூட்டு வரை... மெனோபாஸ் உணவுகள்!

இப்போதும் அதே உணவுகள்!உளுத்தங்களிஒரு பெண் பெரிய மனுஷியாகும்போது உளுத்தங்களி, நாட்டுக் கோழி முட்டை, சிவப்பரிசிப் புட்டு என்று சத்தாகக் கொடுத்து உடம்பைத் தேற்றுவதுபோல, மெனோபாஸ் நேரத்திலும் சத்தாக சாப்பி... மேலும் பார்க்க