ஊழலற்ற மக்களாட்சி தேவை: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வலியுறுத்தல்
``இஸ்மாயில் ஹனியேவின் தலையைப் போல உங்கள் தலைவர்களின் தலையையும் துண்டிப்போம்" -எச்சரிக்கும் இஸ்ரேல்!
ஒரு வருடத்தைக் கடந்து இஸ்ரேல் - ஹமாஸ் குழுவுக்கு மத்தியில் போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் ஆயிரகணக்கானவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேயும், அவரது மெய்ப்பாதுகாவலர் ஒருவரும் ஈரானில் கொல்லப்பட்டனர். ஆனால், இந்தக் கொலைக்கு எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என இஸ்ரேல் உறுதியாக மறுத்து வந்தது. இந்த நிலையில், காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும் வரை தாக்குதல் நடத்துவோம் எனக் கூறும், ஹாமஸ் குழுவுக்கு ஆதரவு தெரிவிக்கும், இரானின் ஆதரவு ஹவுதி குழு இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
அதைத் தொடர்ந்து இஸ்ரேல் இரானின் ஹவுதிக் குழுவை கடுமையாக எச்சரித்திருக்கிறது. இது தொடர்பாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ், ``ஹவுதி பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசுவதற்கு முன்பு ஒன்றை தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் ஹமாஸை தோற்கடித்தோம், ஹிஸ்புல்லாவை தோற்கடித்தோம், ஈரானின் பாதுகாப்பு அமைப்புகளை அழித்துவிட்டோம், சிரியாவில் அசாத் ஆட்சியை வீழ்த்திவிட்டோம், தீமைகளுக்கு கடுமையான அடியைக் கொடுத்துவருகிறோம்.
ஏமனில் உள்ள ஹவுதி பயங்கரவாத அமைப்பு, கடைசியாக இருக்கிறது. அவர்களின் உள்கட்டமைப்பை சேதப்படுத்தி, தெஹ்ரானில் இஸ்மாயில் ஹனியே, காஸாவில் யஷ்யா சின்வர், லெபனானில் ஹசன் நஸ்ருல்லா போல, ஹவுதி தலைவர்களின் தலையையும் துண்டிப்போம்." எனக் கடுமையாகப் பேசியிருக்கிறார்.