செய்திகள் :

Doctor Vikatan: நீரிழிவு பாதித்த எல்லோருக்கும் பார்வையில் பிரச்னைகள் வருமா?!

post image

Doctor Vikatan: என் வயது 45. சர்க்கரை நோய் இருக்கிறது. எனக்கு சமீபகாலமாக பார்வையில் சில பிரச்னைகள் இருக்கின்றன. நீரிழிவு பாதித்துவிட்டாலே, கண் பார்வையில் பிரச்னை வரும், அது போகப் போக  தீவிரமாகும் என்று சொல்கிறார்களே, அது உண்மையா? 

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.     

விஜய் ஷங்கர்

உலக மக்கள் தொகையில் 10 சதவிகிதத்தினருக்கும் மேல் நீரிழிவால் ஏற்படும் பார்வை பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, அது கண்களை இருவிதங்களில் பாதிக்கும். ஒன்று, 'கேட்டராக்ட்' (cataract) எனப்படும் கண்புரை.  அடுத்தது 'டயாபட்டிக் ரெட்டினோபதி' (diabetic retinopathy) எனப்படும் பாதிப்பு. இதில் கண்களின் விழித்திரை பாதிப்புக்குள்ளாகும். ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தாமல் அலட்சியம் செய்தால், ஒரு கட்டத்தில் கண் பார்வையை இழக்க நேரிடலாம். கேட்டராக்ட் எனப்படும் கண்புரை பாதிப்பு வந்தால், அதைச் சரிசெய்துவிடலாம். அதற்கு இன்று நிறைய நவீன சிகிச்சைகள், லேட்டஸ்ட் அறுவை சிகிச்சைகள் இருக்கின்றன.

பார்வை நரம்பு பாதிக்கப்பட்டால் அது மருத்துவர்களுக்கே சற்று சிரமமானதாகத்தான் இருக்கும். நீரிழிவு பாதிப்பின் காரணமாக ரத்தக்குழாய்களில் ரத்தக் கசிவு ஏற்படும். இதற்கு 'விட்ரியஸ் ஹெமரேஜ்' (Vitreous hemorrhage) என்று பெயர். இதை கவனிக்காமல் விட்டால் விழித்திரையே தகர்ந்துபோகும் அளவுக்கு ரிஸ்க் ஏற்படும். இது சற்று சீரியஸான பிரச்னை. எனவே, நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள், 6 மாதங்களுக்கு ஒரு முறை கண் மருத்துவரை அணுகி, கண்களைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டியது அவசியம். கண்புரை பாதிப்பு மட்டும்தான் இருக்கிறது என்றால் அதற்கான அறுவை சிகிச்சையைச் செய்து பார்வையை மீட்கலாம்.

diabetic retinopathy

நரம்புகள் பாதிக்கப்பட்டிருந்தால் பிரத்யேக டெஸ்ட்டுகள் செய்ய வேண்டியிருக்கும். 'ஆப்டிகல் கோஹெரென்ஸ் டோமோகிராஃபி' (Optical coherence tomography) எனப்படும் டெஸ்ட் செய்ய வேண்டியிருக்கும். அதன் பிறகு 'ஃப்ளோரோசீன் ஃபண்டஸ்   ஆஞ்சியோகிராபி' (Fluorescein fundus angiography). இதில் கை வழியே டை போன்ற திரவத்தைச் செலுத்தி, உள்ளே எங்கெல்லாம் ரத்தக் கசிவு இருக்கிறது என்று பார்ப்பார்கள். அதன் பிறகு லேசர் அல்லது பிரத்யேக இன்ஜெக்ஷன் மூலம் சிகிச்சை அளிக்கப்படும்.  இவற்றை எல்லாம் மீறி, விழித்திரை தகர்ந்துவிட்டால், ரெட்டினல் டிடாச்மென்ட் சர்ஜரி செய்ய வேண்டியிருக்கும். எனவே, ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. தினமும் நடைப்பயிற்சி செய்யுங்கள். ஸ்ட்ரெஸ் அளவை கட்டுக்குள் வைத்திருங்கள். உணவுக்கட்டுப்பாடு முக்கியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Fish : கடல் மீன், ஆற்று மீன், ஏரி மீன்... எது சிறந்தது? - டயட்டீஷியன் விளக்கம்!

ஒரு தட்டில் சுடச்சுடச் சோற்றுடன் சூடான மீன் குழம்பும், அதற்குத் தொட்டுக்கொள்ள இரண்டு வறுத்த மீன் துண்டுகளும் இருந்தால்போதும்... மீன் பிரியர்கள் தங்கள் கவலைகளை எல்லாம் மறந்தேபோய்விடுவார்கள். மீனுக்கும்... மேலும் பார்க்க

America: 50 மணி நேர முக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி; மருத்துவத் துறையின் புதிய சாதனை; பின்னணி என்ன?

முகமாற்று அறுவை சிகிச்சை என்பது மெடிக்கல் மிராக்கிள்தான். அதிலும், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட முகத்தின் உணர்வுகளையும் மீட்டு எடுத்திருக்கிறார்கள் அமெரிக்க மருத்துவர்கள். அமெரிக்காவின் மிக்சிகன் ( Mich... மேலும் பார்க்க

நின்ற இதயம், 120 நிமிடங்கள் கழித்து துடித்தது... ஒடிசாவில் நடந்த மெடிக்கல் மிராக்கிள்!

eCPR சிகிச்சை மூலம் இதயத்துடிப்பு நின்ற 120 நிமிடங்களுக்குப் பிறகு, நோயாளி ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. ஒடிசாவில் நாயகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரின் இதயத்துடிப்பு கிட்டத்தட்ட 90... மேலும் பார்க்க

Health: பச்சையா, வறுத்ததா, வேக வைத்ததா... வேர்க்கடலையில் எது நல்லது?

எல்லாருக்கும் பிடிச்ச ஒரு தின்பண்டம் வேர்க்கடலை. சிலருக்கு பச்சையா சாப்பிட பிடிக்கும். சிலருக்கு ரோட்டோரங்கள்ல உப்புத்தண்ணி தெளிச்சு வறுத்து தர்ற வேர்க்கடலை பிடிக்கும். இன்னும் சிலருக்கு வேக வெச்ச வே... மேலும் பார்க்க

வாரத்துக்கு 2 நாள்கள் உடற்பயிற்சி... மூளைப் பாதுகாப்பு..! ஆய்வு முடிவு சொல்வதென்ன..?

எல்லோருமே ஜிம்முக்கு சென்று மாங்கு மாங்கென்று உடற்பயிற்சி செய்து உடலை கட்டுமஸ்தாக வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறோம்.ஆனால், அனைவருக்கும் இது சாத்தியம் இல்லை. அதனாலேயே கடுமையாக உடற்பயிற்சி செய்பவர்களை 'ஆஹோ ஓ... மேலும் பார்க்க

பிளாஸ்டிக் தோல் குழந்தைகள்: காரணம் என்ன? தீர்வு இருக்கிறதா? - நிபுணர் விளக்கம்

கடந்த சில தினங்களுக்கு முன்னாள், ராஜஸ்தானின் பிகானரிலுள்ள மருத்துவமனையில் பிளாஸ்டிக் போன்ற கடினமான தோலுடன் இரட்டைக் குழந்தைகள் பிறந்ததை அனைவரும் அறிவோம். ஹார்லெக்வின் வகை இக்தியோசிஸ் (Harlequin-type i... மேலும் பார்க்க