செய்திகள் :

Doctor Vikatan: 10 வயது சிறுவனுக்கு அடிக்கடி சளி, இருமல்... சித்த மருத்துவம் உதவுமா?

post image

Doctor Vikatan: என் 10 வயது மகனுக்கு அடிக்கடி சளி, இருமல் வருகிறது. ஒவ்வொரு முறையும் மருத்துவரிடம் காட்டி, மாத்திரைகள் கொடுக்கிறோம். ஆனாலும் நிரந்தர தீர்வு இல்லை. சளி, இருமல் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கொடுக்க சித்த மருத்துவத்தில் வழிகள் இருந்தால் சொல்லவும்.

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

நோய் வாய்ப்படும்போது மருத்துவரைப் பார்த்து மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்வது மட்டும் சரியான விஷயமல்ல. குழந்தை அடிக்கடி நோய் வாய்ப்படுகிறான் என்றால் முதலில் அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து, சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம்.

குழந்தைகளின் உடல்நல பாதிப்புக்கு நோய் எதிர்ப்பாற்றல் இல்லாதது முக்கிய காரணம் என்றாலும் அதை மீறிய வேறு காரணங்களும் இருக்கக்கூடும். இந்தப் பிரச்னைக்கு சித்த மருந்துகள் நிச்சயம் உதவும்.

வீட்டிலேயே கற்பூரவள்ளி, துளசி, சித்தரத்தை, அதிமதுரம் போன்றவற்றை சாறு எடுத்து தேன் கலந்து கொடுக்கலாம்.  ஆனால் இதையெல்லாம் தினமும் செய்ய முடியாது, குழந்தையின் நோய் எதிர்ப்பாற்றல் மிக மோசமாக இருக்கிறது என்ற நிலையில் மருத்துவ ஆலோசனையுடன் லேகியம் உள்ளிட்ட மருந்துகளைக் கொடுக்கலாம்.

தகுந்த சித்த மருத்துவரை அணுகி, காரணம் அறிந்து அவர் பரிந்துரையின் பேரில் மட்டுமே மருந்துகளைக் கொடுக்க வேண்டும்.

சித்த மருத்துவம் (Representational Image)

உங்கள் மகனுக்கு டான்சில்ஸ் எனப்படும் தொண்டைச்சதை வீக்க பிரச்னை உள்ளதா என்றும் பாருங்கள். அப்படி இருந்தால் அதிமதுரம், சித்தரத்தை, திப்பிலி மூன்றையும் சம அளவு எடுத்து தனித்தனியே பொடித்துக்கொள்ளவும். ஒவ்வொன்றிலும் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து, அத்துடன் துளசி இலைகள் 10, கற்பூரவள்ளி இலைகள் 5 ஆகிய எல்லாவற்றையும் சிறிது ஆடாதொடை இலைச்சாறு விட்டு அரைத்துக் கொள்ளவும். கலவையை சின்னச் சின்ன மாத்திரைகளாக உருட்டி,  நிழலில் உலர்த்தி எடுக்கவும். அப்படிக் காயவைக்காவிட்டால் பூசணம் பிடித்துவிடும். காயவைக்க முடியாதவர்கள் சிரப் வடிவிலும் எடுத்துக்கொள்ளலாம். மாத்திரையாக எடுப்பதானால் மூன்று வேளைகளுக்குத் தலா ஒன்று, சிரப் என்றால் தேன் கலந்து மூன்று வேளைகளுக்கு தலா ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்துக்கொள்ளலாம்.  இதை எடுத்துக்கொள்வதோடு, குழந்தையை தினமும் வெந்நீரில் கல் உப்பும், மஞ்சள் தூளும் சேர்த்து வாய் கொப்புளிக்கச் சொல்லவும்.

கூடவே மருத்துவர் பரிந்துரைக்கும் உணவுக்கட்டுப்பாடுகளையும் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் மருந்துகள் முழுமையாக வேலை செய்யும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: அடிக்கடி அவதிப்படுத்தும் வாய்ப்புண்கள்... நிரந்தர தீர்வு என்ன?

Doctor Vikatan:என் மகனுக்கு 20 வயதாகிறது. அவனுக்கு 10 நாள்களுக்கொரு முறை வாயில் புண்கள் வருகின்றன. என் கணவருக்கும் இதே பிரச்னை இருக்கிறது. வாய்ப்புண் என்பது பரம்பரையாகத் தொடருமா? இதற்கு நிரந்தர தீர்வு... மேலும் பார்க்க

`எக்ஸ்ரேவுக்கு பதில் ஜெராக்ஸ்' நோயாளி, முன்னாள் அமைச்சர் விமர்சனம்... மருத்துவ அதிகாரி விளக்கம்!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் காளிபாண்டி. இவர் உணவகம் ஒன்றில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில், காளிபாண்டி டூவீலரில் சென்றபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து விபத்தில... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஃப்ரோஸன் ஷோல்டர் (Frozen Shoulder) பாதிப்பு... இரண்டு கைகளிலும் மாறி மாறி வருமா?

Doctor Vikatan:எனக்கு ஒரு வருடத்துக்கு முன்பு இடப்பக்கத்தில் ஃப்ரோஸன் ஷோல்டர் (Frozen Shoulder) பாதிப்பு வந்தது. இப்போதுதான் அது குறைய ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில் இப்போது வலது பக்க கையில் அதே வலி... மேலும் பார்க்க

Doctor Vikatan: நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் (pre-diabetes) மாத்திரைகள் எடுக்க வேண்டுமா?

Doctor Vikatan:சமீபத்தில் செய்த ரத்தப் பரிசோதனையில் எனக்கு ப்ரீடயாபட்டிஸ் (pre-diabetes) என்று வந்திருக்கிறது. இதற்கு இப்போதே மருந்துகள் எடுத்துக்கொள்ள ஆரம்பிக்க வேண்டுமா? ப்ரீ டயாபட்டிஸுக்கு மருந்துக... மேலும் பார்க்க

Doctor Vikatan: மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?

Doctor Vikatan: கடந்த சில நாள்களாகமுதுகுவலிக்கானமருந்துகள் எடுத்து வருகிறேன். அந்த மருந்துகள் எடுக்க ஆரம்பித்ததும்எனக்கு வாய்ப்புண்கள் அதிகமாகிவிட்டன. மருந்துகளுக்கும் வாய்ப்புண்களுக்கும் தொடர்பு உண்ட... மேலும் பார்க்க