செய்திகள் :

Doctor Vikatan: சாதம் வடித்த கஞ்சியை தலைமுடிக்கும் சருமத்துக்கும் பயன்படுத்தலாமா?

post image

Doctor Vikatan: சாதம் வடித்த கஞ்சியை தலைமுடிக்கும், சருமத்துக்கும் பயன்படுத்துவது சரியானதா... ரைஸ்வாட்டர் ஃபேஸ்வாஷ், ரைஸ்வாட்டர் ஷாம்பூ என்றெல்லாம் இப்போது பிரபலமாகி வருகிறதே... இவற்றை உபயோகிக்கலாமா? வீட்டிலேயே சாதம் வடித்த கஞ்சியைப் பயன்படுத்துவதானால், எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா  

சருமநல மருத்துவர் பூர்ணிமா

அரிசித் தவிடு, சாதம் வடித்த கஞ்சி, அரிசி களைந்த தண்ணீர் என அரிசி சம்பந்தப்பட்ட  பொருள்கள் அழகு சிகிச்சையில் அதிகம் பயன்படுத்தப்படுவது உண்மைதான். காரணம், அவற்றிலுள்ள ஃபீனால் மற்றும் ஸ்குவாலின் போன்ற ஃபைட்டோநியூட்ரியன்ட்ஸ்தான். ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ் என்பவை தாவரங்களிலிருந்து பெறப்படும் சத்துகள்.

ஃபீனாலுக்கு சருமத்தை வெண்மையாக்கும் தன்மை உண்டு. அது சரும நிறத்தை லைட்டாக மாற்றி, அதன் மூலம் பிரகாசமாகக் காட்டும். ஸ்குவாலின் என்பது சருமத்தின் தடுப்பு லேயரை வறண்டு போகாமல் எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்கச் செய்யும்.

'ஏடோபிக் டெர்மடைட்டிஸ்' என்பது பரவலாகக் காணப்படுகிற ஒருவகை சரும பாதிப்பு. இது குழந்தைகளை அதிகம் பாதிக்கக்கூடியது. இந்தப் பிரச்னைக்கு ஓட்ஸ் உபயோகிப்பார்கள். அதற்கு இணையாக ரைஸ் வாட்டர் உபயோகிப்பதும் பாதுகாப்பானது.

தலைக்குக் குளிக்கும்போது கடைசியாக சாதம் வடித்த கஞ்சியால் கூந்தலை அலசலாம்.

வீட்டிலேயே உபயோகிக்கக்கூடிய மஞ்சள், சந்தனம், எலுமிச்சை சாறு போன்றவற்றை எல்லோரும் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்துவோம். ஆனால், ரைஸ் வாட்டரை பொறுத்தவரை அப்படி எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் எல்லோருமே பயன்படுத்தக்கூடிய அளவுக்குப் பாதுகாப்பானது. அது அலர்ஜியை உண்டாக்காது.  சருமத்தில் எரிச்சல், சிவந்துபோவது போன்றவற்றை  ஏற்படுத்தாது.

தலைக்குக் குளிக்கும்போது கடைசியாக சாதம் வடித்த கஞ்சியால் கூந்தலை அலசலாம். அந்தக் கஞ்சியில் ஓட்ஸை ஊறவைத்தும் குளிப்பதற்குப் பயன்படுத்தலாம். மற்றபடி  ரைஸ் வாட்டர் ஷாம்பூ, ஃபேஸ் வாஷ் போன்றவற்றை உபயோகிப்பதற்கு முன்,  அவற்றில் சேர்க்கப்பட்டுள்ள மற்ற பொருள்கள், கெமிக்கல்கள் குறித்து உங்கள் சரும மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு பயன்படுத்தலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Beauty: கிளியோபாட்ரா, நூர்ஜஹான், எலிசபெத், டயானா... அரசிகளின் அழகு ரகசியங்கள்..!

அரசிகளின் அழகுக் குறிப்பு என்றாலே, நமக்கு கிளியோபாட்ராவும் அவருடைய கழுதைப்பால் குளியலும்தான் நினைவுக்கு வரும். இதைத் தாண்டி, கிளியோபாட்ரா உட்பட இன்னும் பல அரசிகளின் அழகு ரகசியங்களைச் சொல்கிறார் பியூட்... மேலும் பார்க்க

Doctor Vikatan: நடிகை குஷ்பூ சொன்ன கேரட் - தேங்காய் எண்ணெய் கலவை... சருமத்தை இளமையாக்குமா?

Doctor Vikatan:நடிகை குஷ்பூ தனது சோஷியல் மீடியாவில், கேரட் துருவலோடு, தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொதிக்கவைத்த எண்ணெய் செய்முறையைப் பகிர்ந்திருந்தார். அது ஆன்டிஏஜிங் தன்மை கொண்டதாகவும் சரும நிறத்தை அத... மேலும் பார்க்க

Mrs.India International 2024: முடிசூட்டிய சாக்ஷி குப்தா.. யார் இவர்?

மிஸஸ் இந்தியா இன்க் சீசன் 5 இல் 2024 ஆம் ஆண்டுக்கான நடைபெற்ற மிஸஸ் இந்தியா இன்டர்நேஷனல் போட்டியில் வெற்றியாளராக சாக்ஷி குப்தா தேர்வாகியுள்ளார். அழகு, திறமை, மன உறுதி ஆகியவற்றை எழுச்சியோடு கொண்டாடும் வ... மேலும் பார்க்க