செய்திகள் :

Doctor Vikatan: மழைக்காலத்தில் போட்டுக்கொள்ள வலியுறுத்தப்படும் Flu vaccine.. யாருக்கு அவசியம்?

post image

Doctor Vikatan: மழை மற்றும் குளிர் காலங்களில் உடல்நலம் பாதிக்கப்படாமல் இருக்க, ஃப்ளு தடுப்பூசி போட வேண்டும் என்று செய்திகள் வருகின்றனவே... அந்தத் தடுப்பூசி எதற்கானது... யாரெல்லாம் போட்டுக்கொள்ள வேண்டும்... அதற்கு பக்க விளைவுகள் இருக்குமா?

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த பொது மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி 

மருத்துவர் சஃபி சுலைமான்

இன்ஃப்ளுயென்ஸா தடுப்பூசியையே 'ஃப்ளு' தடுப்பூசி' (Flu vaccine) என்று குறிப்பிடுகிறோம். இன்ஃப்ளுயென்ஸா வைரஸ் (Influenza Virus) தொற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளவே இந்தத் தடுப்பூசி  போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

இந்தத் தடுப்பூசியைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன், இன்ஃப்ளுயென்ஸா தொற்று பற்றித் தெரிந்துகொள்வதும் அவசியமாகிறது. குளிர் மற்றும் மழைக்காலங்களில் வரக்கூடிய ஜலதோஷம், காய்ச்சல், தொண்டைவலி, தலைவலி என பலருக்கும் வரக்கூடிய பாதிப்புதான் ஃப்ளு. இது வயது வித்தியாமின்றி எல்லோரையும் பாதிக்கும். குறிப்பாக, பள்ளி செல்லும் குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கக்கூடியது. அதே மாதிரி வயதானவர்களையும் இது பெரிய அளவில் பாதிக்கும். இவர்களுக்கெல்லாம் ஃப்ளு பாதிப்பானது ஒன்றிரண்டு நாள்கள் இருந்தாலே, அதன் தாக்கம் மிகவும் தீவிரமாக இருக்கும்.

Influenza

இந்தத் தடுப்பூசியை 6 மாதக் குழந்தையிலிருந்து அனைத்து வயதினருமே போட்டுக் கொள்ளலாம். வருடத்துக்கொரு முறை போடக்கூடிய தடுப்பூசி இது. கோடைக்காலம் முடிந்த பிறகு செப்டம்பர், அக்டோபர் வாக்கில் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். மழைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன் Flu vaccine போட்டுக்கொள்வது பாதுகாப்பானது. நீங்கள் பயப்படுவது போல இந்தத் தடுப்பூசிக்கு பக்க விளைவுகள் கிடையாது. அரிதாக சிலருக்கு லேசான உடல்வலியும் சோர்வும் இருக்கலாம். மற்றபடி இதில் பயப்பட ஒன்றுமில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Vasundhara Oswal: உகாண்டா சிறையில் அடைக்கப்பட்ட இந்திய வம்சாவளி தொழிலதிபரின் மகள்.. என்ன காரணம்?

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், தொழிலதிபர் பங்கஜ் ஓஸ்வால். தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் இவர் தன் மகள் வசுந்தரா ஓய்வால் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உகாண்டா நாட்டில் சிறைபிடிக்கப்பட... மேலும் பார்க்க

Chandrachud ``என் குழந்தைகளுக்கான பரிசோதனை வலி மிகுந்தவை'' - இந்தியாவின் தலைமை நீதிபதி சந்திரசூட்

இந்தியாவின் தலைமை நீதிபதி சந்திரசூட், தன்னுடைய மகள்கள் குறித்து இரண்டு வாரங்களுக்குள் முன்னால் பேசிய வீடியோ ஒன்று பலருடைய மனதையும் உருக்கும் வண்ணம் இருக்கிறது. உச்ச நீதி மன்றத்தின் சிறார்களுக்கான நீதி... மேலும் பார்க்க

Israel - Gaza: ``என்னிடம் மூன்று செய்திகள் இருக்கிறது..." - போர் முடிவு குறித்து இஸ்ரேல் பிரதமர்!

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலின் தொடர் அத்துமீறலுக்கு எதிராக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது ஹமாஸ் குழு. ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யஹ்யா சின்வர். தொடர்ந்து அந்த அமைப்பி... மேலும் பார்க்க

Doctor Vikatan: வேர்க்கடலை.. வறுத்ததா, வேகவைத்ததா... எது ஆரோக்கியமானது?

Doctor Vikatan: எங்கள் வீட்டில் எல்லோருக்கும் அடிக்கடி வேர்க்கடலை சாப்பிடும் வழக்கம் உண்டு. வேர்க்கடலையை வறுத்துச்சாப்பிடுவது நல்லதா, வேகவைத்துச் சாப்பிடுவது சரியானதா... தினமும் எடுத்துக்கொள்ளலாமா?பதி... மேலும் பார்க்க

``தமிழகத்தின் இருமொழி கொள்கையை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும்'' - ப.சிதம்பரம்

"தமிழக மக்களின் எண்ணங்கள் இரு மொழிக் கொள்கைதான், அதை தமிழக அரசு பிரதிபலிக்கிறது இதனை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும்" என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.ஆளுநர் ரவி - ப.சிதம்பரம்... மேலும் பார்க்க

Israel: ``இஸ்ரேல் விவகாரத்தில் பாஜக அரசின் மௌனத்துக்கு இதுதான் காரணம்.." - செல்வப்பெருந்தகை தாக்கு

பாலஸ்தீனத்துக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து நடத்திவரும் போரை நிறுத்த வேண்டும் என அமைதிக்கான மக்கள் இயக்கம் கருத்தரங்க கூட்டம் ராயப்பேட்டை ரம்ஜான் மஹாலில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ்... மேலும் பார்க்க