Dude: "ஒரு நாளைக்கு 19 மணி நேரம் வொர்க் பண்ணுவான், ஆனா"- நெகிழும் சாய் அபயங்கர் ...
Dude: 'எதுவுமே எனக்கு வொர்க் அவுட் ஆகவில்லை என்றால்.!' - உருவக்கேலி குறித்து பிரதீப் ரங்கநாதன்
பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் `டூட்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.
பிரதீப்புடன் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார். சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் `டூட்' படத்தை இயக்கியிருக்கிறார்.
ரோகினி, சரத்குமார் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.
சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (அக்டோபர் 13) நடைபெற்றது.

அதில் பேசிய பிரதீப் ரங்கநாதன், " `டூட்' படம் நன்றாக வந்திருக்கிறது. எங்கள் எல்லோருக்கும் படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ரொம்ப ஜாலியான படம். ஃபேமிலி எல்லாம் சேர்ந்து பார்க்கக்கூடிய படம். 'எல்.ஐ.கே' , 'டூட்' இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளிவராதது இரண்டு படங்களுக்குமே நல்லதுதான். அப்படி வெளியாகி இருந்தால் இரண்டு படங்களின் கலெக்ஷனும் பாதிக்கப்பட்டிருக்கும்" என்றிருக்கிறார்.
இதனைத்தொடர்ந்து பிரதீப்பை உருவக்கேலி செய்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த அவர், " உருவக்கேலி செய்வது எல்லாம் என்னை பெரிதாக பாதிக்காது.
எனக்கு முன்னாடி மக்களுடைய அன்பு இருக்கும்போது நான் ஏன் உருவக்கேலி பற்றி யோசிக்கணும்.
எதுவுமே எனக்கு வொர்க் அவுட் ஆகவில்லை என்றால் நான் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படலாம்.
ஆனால் மக்கள் எனக்கு நிறைய அன்பு தருகிறார்கள். அதனால் இது ஒரு விஷயமே கிடையாது" என்று பேசியிருக்கிறார்.