அரசமைப்புச் சட்ட பிரதி சேதம்: மகாராஷ்டிரத்தின் பா்பனியில் வன்முறை
Elon Musk, Trump -ஐ டேக் செய்து உ.பி., இளைஞர் தற்கொலை... கடைசி வீடியோவில் பேசியது என்ன?
மனைவி மற்றும் அவரது குடும்பத்தாரின் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டதாக 24 பக்க அளவில் மரண குறிப்பு எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார் அதுல் சுபாஷ்.
இவர் மீது இவரது மனைவி மற்றும் மனைவியின் குடும்பத்தினர் குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். வழக்குகளை திரும்பப்பெற இவரிடம் 3 கோடி பணம் கேட்டதாகவும், இவரது மகனை காண அனுமதிக்க வேண்டுமென்றால் கூடுதலாக 3 லட்சம் வழங்க வேண்டும் என நிர்பந்தித்ததாகவும் கூறப்படுகிறது.
அதுல் மரணத்துக்கு முன்னர் எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து எலான் மஸ்க் மற்றும் டொனால் ட்ரம்ப்பை டேக் செய்திருந்தார். அந்த வீடியோவில் "நீங்கள் இதைப் படிக்கும்போது நான் இறந்துவிடுவேன். இந்தியாவில் தற்போது ஆண்கள் மீதான சட்டரீதியான இனப்படுகொலை நடக்கிறது." எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதுல் சுபாஷின் சகோதரர் பிகாஸ் குமார், "ஒவ்வொரு முறை அதுல் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்குச் செல்லும்போதும் அவரது மனைவியின் குடும்த்தினர் கேலி செய்தனர். அதுலால் பணம் கொடுக்க முடியவில்லை என்றால் சாகும்படி கூறியிருக்கின்றனர். இதுவே அவரை தூண்டியிருக்கிறது" எனக் கூறியுள்ளார்.
34 வயதான அதுல் சுபாஷ் பெங்களூருவில் உள்ள ஒரு ஆட்டோமொபைல் நிறுவனத்தில் பணியாற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த நபர். கடந்த திங்கள் அன்று அவரது குடியிருப்பில் தூக்கிட்ட நிலையில் அவரது உடல் கண்டுக்கப்பட்டது.
" நான் என் வாழ்வை முடித்துக்கொள்வதே சரியானதாக இருக்கும். நான் சம்பாதிக்கும் பணத்தை, அவர்களுக்கு வழங்குவதால் என்னுடைய எதிரிகள் வலிமையாகின்றனர், அதே பணத்தை வைத்து என்னை அழிக்கின்றனர். இந்த சுழற்சி தொடர்கிறது. நான் வரியாகச் செலுத்தும் எனது சொந்தப் பணத்தில், நீதிமன்றங்களும், காவல் துறையும் என்னையும் என் குடும்ப உறுப்பினர்களையும் மற்றவர்களுடன் சேர்ந்து துன்புறுத்துகின்றன. இந்த சப்ளை நிறுத்தப்பட வேண்டும். அவர்களும் (மனைவியின் குடும்பத்தினர்) என்னை தற்கொலை செய்துகொள்ளவே சொல்கின்றனர்" என அந்த வீடியோவில் பேசியுள்ளார் சுபாஷ்.
மேலும் தனது இறுதி சடங்கில் மனைவி மற்றும் மனைவியின் குடும்பத்தினர் கலந்துகொள்ள தடை விதிக்க வேண்டுமென்றும், அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்ட பின்னரே தனக்கு இறுதி சடங்கு செய்ய வேண்டுமென்றும் கூறியிருக்கிறார். "எல்லாவற்றையும் கடந்து நான் குற்றம்சாட்டுபவர்கள் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கப்பட்டார்களென்றால் என் சாம்பலை நீதிமன்றத்துக்கு அருகில் இருக்கும் சாக்கடையில் கலந்துவிடுங்கள். இந்த நாட்டில் உயிருக்கு என்ன மதிப்பென்று நான் தெரிந்துகொள்கிறேன்." என எழுதியுள்ளார். தனது மகனை நல்ல மதிப்புகளுடன் வளர்க்க தனது பெற்றோரிடம் கொடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார். வயதான காலத்தில் தனது பெற்றோரைப் பார்த்துக்கொள்ள முடியாததற்கு மன்னிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.